உள்ளூர் செய்திகள்

வந்தாச்சு படகு போக்குவரத்து!

இன்று, சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்ததால், மனிதர்கள் நிம்மதியாக நடந்து செல்ல முடிவதில்லை.இந்த போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்க, 'வாட்டர் மெட்ரோ' என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது, கேரளா நதிநீர் போக்குவரத்து கழகம். ஏர்ணாகுளத்திலிருந்து அக்கம்பக்கத்து ஊர்களுக்கு செல்ல, நவீன மின்சார படகுகளை இயக்குகிறது. முதற்கட்டமாக, 72 புது படகுகள், அதுவும், குளு குளு, 'ஏசி' வசதி செய்யப்பட்டு, போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, தண்ணீரில் மிதக்க இருக்கிறது.முன்னொரு காலத்தில், போக்குவரத்துக்கு படகுகளை தான் நம்பி இருந்தனர், கொச்சி வாழ் மக்கள். பிறகு, பாலங்கள் வந்ததும், வாகனங்களை நாடினர். இப்போது, மீண்டும் படகுகளை பயன்படுத்த உள்ளனர். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !