உள்ளூர் செய்திகள்

மீன் வறுவல் சாப்பிடும் திருவிழா!

போர்ச்சுகல் நாட்டின், லிஸ்பன், புனித அந்தோனியார் கோவில், திருவிழாவின் போது, அக்கம் பக்கத்தில் உள்ள தெருக்கள் முழுவதும், மீன் வறுவல் கடைகள் முளைத்து விடும்.இந்த கடைகளில், மத்தி வகை மீன் மட்டும் பயன்படுத்தப்படும். 'சார்டைன் ப்ரை' எனப்படும் இந்த மீன் வறுவல் வியாபாரம், களை கட்டும். திருவிழாவுக்கு வருபவர்கள், தெருக்கடைகளில் இருந்து மத்தி மீன் வறுவலை வாங்கி சாப்பிடுவர். விழாவின் போது மத்தி வறுவல் சாப்பிடுவதை, சம்பிரதாயமாக கடைப்பிடித்து வருகின்றனர்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !