அந்துமணி பதில்கள்!
ஏ.மஜ்பா ஷாகுல், தஞ்சாவூர்: போலீசார் லஞ்சம் வாங்குவதை ஒழிக்கும் வகையில், காவல் நிலையங்களுக்கான செலவுத் தொகையை, பல மடங்கு உயர்த்தி, தமிழக அரசு, 71 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதே... காவல் நிலையங்களில் புகார் கொடுக்கச் செல்லும் பொதுமக்களை, இனியாவது, 'பேப்பர், பேனா வாங்கி வாருங்கள்; டீ, டிபன் வாங்கித் தாருங்கள்...' என, போலீசார் அலைக்கழிக்காமல் இருக்கின்றனரா என்று பார்ப்போம்!கே.ஆர்.அசோகன், ஈரோடு: 'தமிழகத்தின் வளர்ச்சியில், மக்கள் பங்காற்ற வேண்டும்...' என்று கவர்னர், அர்லேகர் அழைப்பு விடுத்துள்ளது குறித்து... தமிழக கவர்னர் கூறுவது போல், தமிழக மக்கள் ஒவ்வொருவரும் நேர்மையாக, லஞ்சம் வாங்காமல்-கொடுக்காமல், நல்ல முறையில் உழைத்து, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லலாமே! நம் அனைவருக்கும் அந்தப் பொறுப்பு உள்ளதே! 'ஓட்டு போட்டாச்சுன்னு ஒதுங்காதீங்க... என்னோடு சேர்ந்து உழையுங்கள்...' என, முதல்வர் விஜயும் அழைப்பு விடுத்திருக்கிறாரே!* வீ.குமாரி, சென்னை: 'மருத்துவ சேவையை, ஏழை-பணக்காரர் என்ற வேறுபாடின்றி, அனைவருக்குமானதாக உருவாக்கியுள்ள தாய்லாந்து நாட்டைப் பின்பற்றி, தமிழக மருத்துவக் கட்டமைப்பு மேம்படுத்தப்படும்...' என்று அறிவித்துள்ளாரே, த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், அருண்ராஜ்... நல்ல முயற்சி; உரிய முறையில் ெசயல்படுத்தப்பட்டு, தொய்வில்லாமல் நிர்வகிக்கப்பட்டால் நல்லது தானே! ப.மகராசி, தஞ்சாவூர்: 'எதையும் திட்டமிட்டு உருவாக்குவது தானே உண்மையான பெருமை; தமிழகத்தில் அந்த பெருமை, ஆக்க சக்தியான, தி.மு.க.,வுக்கே உரியது...' என்கிறாரே, மு.க.ஸ்டாலின்... எதையெல்லாம், 'ஆக்கினர்' என்பதையும் அவரே விளக்கி விட்டால் நல்லது!* பி.ஜெயகுமார், வந்தவாசி: ஆந்திரப் புயல் மீட்புப் பணிகளைச் செய்ய, தமிழகத்திலிருந்து, 500 மின் ஊழியர்களை அனுப்பியுள்ளது தமிழக அரசு. இது, நமக்குப் பெருமை தானே... ஒவ்வொரு மாநிலமும் இப்படி அண்டை மாநிலங்களுடன் நட்புடன் பழகி, உதவிகளை பரிமாறிக் கொண்டால், ஒற்றுமையான இந்தியா எழுச்சி பெறும்; நாடு, உலக அளவில் தலைசிறந்து விளங்கும்! கி.பாலா, ராமேஸ்வரம்: 'அண்டை மாநிலங்களை விட, தமிழகத்தில் வளர்ச்சி குறைவு...' என, தி.மு.க., முன்னாள் அமைச்சர், தங்கம் தென்னரசு கூறுகிறாரே... முற்பகலில் நல்லது செய்திருக்க வேண்டியவர் கோட்டை விட்டதால், பிற்பகலில் விளைவு ஏற்பட்டிருக்கிறது. அவர் யாரென்று, தங்கம் தென்னரசுக்கு மிக நன்றாக தெரியுமே! எம்.ராஜேந்திரன், லால்குடி: புத்தகம் இருக்க வேண்டிய இளைஞர்களின் கைகளில், போதைப்பொருள் இருப்பது வேதனை அளிக்கிறதே...போதைப்பொருள் மட்டுமா இருக்கிறது... பலர் கையில் பயங்கர ஆயுதங்களும், தறிகெட்டு ஓடும், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் அல்லவா உள்ளன!