உள்ளூர் செய்திகள்

‘புல்லட் கேர்ள்’ தியா!

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியை சேர்ந்த, தியா என்ற இளம் பெண், ‘புல்லட் கேர்ள்’ என, அவ்வூரில் அழைக்கப்படுகிறாள். இவருக்கு, ‘புல்லட் பைக்’ என்றால் அலாதி பிரியம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ‘புல்லட் பைக்’கில் ஏறி ஊரை வலம் வருகிறார். கோட்டயம், காஞ்சிரப்பள்ளி பொறியியல் கல்லுாரியில் பொறியாளர் பட்டம் படிக்கும் போதே, தோழிகளுடன், ‘புல்லட்’டில் கரடு முரடான காட்டு பாதைகளில் சுற்றி திரிந்திருக்கிறார். இவர் தந்தை, ‘புல்லட் பைக்’ பழுது பார்க்கும் பட்டறையை நடத்தி வருகிறார். சிறு வயதில் இருந்தே, ‘பைக்’கை பழுது பார்க்கும் தொழிலை தந்தையிடமிருந்து, நன்கு கற்றுகொண்ட, தியா தற்போது, ஒரு, ‘புல்லட்’டின் பாகங்களை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து போட்டாலும், அதை சரியாக பொருத்திவிடுவார். இவருக்கு ‘புல்லட்’ மட்டுமின்றி, ‘ஜீப்’பில் மலைப்பாதைகளில் சுற்றுவதும் மிகவும் பிடிக்கும் என்கிறார். – ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !