உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

கமலஹாசனின் மொழி பெயர்ப்பு பயிற்சி முகாம்!மொழி பெயர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், கமல் பண்பாட்டு மையம் சார்பில், முகாம் நடத்த போகிறார், நடிகர் கமலஹாசன்.இந்த பயிற்சி முகாமில் பங்கு பெறுபவர்களுக்கு, ஓரான் பாமுக் மற்றும் ஹருதி முரக்காமி போன்ற சர்வதேச எழுத்தாளர்களின் படைப்புகளை தமிழில் மொழி பெயர்த்த, எழுத்தாளர் ஜி.குப்புசாமி மூலம் பயிற்சி கொடுக்க இருக்கிறார்.சினிமா பொன்னையாதென்னிந்திய நடிகையரை கதறவிட்ட, ஜான்வி கபூர்!கடந்த, ஆறு ஆண்டுகளாக பாலிவுட்டில் நடித்து வந்த நடிகை, ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கபூர், தற்போது தெலுங்கில், ஜூனியர் என்.டி.ஆர்., உடன், தேவரா என்ற படத்தில் நடித்திருக்கிறார். தமிழிலும் வெளியாகவுள்ள இந்த படத்தில், இளமை ததும்பும் கலக்கலான வேடத்தில் நடித்திருக்கிறார்.முதல் தென்மாநில படத்திலேயே அவர் இப்படி, 'கிளுகிளு'ப்பாக, 'என்ட்ரி' கொடுத்திருப்பது, தங்களது மார்க்கெட்டுக்கு வேட்டு வைத்து விடுமோ என, ஒட்டுமொத்த தென்மாநில இளவட்ட நடிகையரும் கதறுகின்றனர்.எலீசாவாய்ப்பு கேட்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!ஆடம்பரமான அழகு இல்லை என்றாலும், பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போன்ற தோற்றம் கொண்டவரான, ஐஸ்வர்யா ராஜேஷ், சினிமாவில், ஒரு, 'ரவுன்ட்' வந்து விட்டார். தற்போது, அவர் நடித்த சில படங்கள், அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால், புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தள்ளாடி வருகிறார். அதனால், மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக, 'ஹீரோயின் அல்லாத, 'வெயிட்'டான கேரக்டர்களில் நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன். என் திறமைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்...' என்று கூறி, சில வெற்றி பட இயக்குனர்களை துரத்தி வருகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.எலீசாவிக்ரமுக்கு வந்த, ஆசை!விக்ரம் நடித்த சில, 'ஹிட்' படங்களின், இரண்டாம் பாகத்தை இயக்க, அப்படங்களின் இயக்குனர்கள் விருப்பம் தெரிவித்த போது, அதை அவர் மறுத்து வந்தார். 'இதற்கு மேலும் இந்த கதையை இழுத்தால் அதில் சுவராஸ்யம் இருக்காது...' என்று கூறினார்.தற்போது, தங்கலான் படம் திரைக்கு வந்துள்ள நிலையில், 'இது போன்ற கதைகள் தான் ஒரு நடிகனுக்கு தீனி போடக் கூடியவை. அதனால் இப்பட,இயக்குனர் பா.ரஞ்சித் எப்பொழுது என்னை அழைத்தாலும் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்...' என்று கூறுகிறார்.சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!தளபதி நடிகருக்கும், மூனுஷாவுக்கும் நீண்ட காலமாகவே நட்பு இருந்து வரும் நிலையில், மீண்டும் அவர்கள் இணைந்து நடிக்க துவங்கியதிலிருந்து அடிக்கடி தளபதியை படப்பிடிப்பு தளங்களில் சந்தித்து வந்தார், மூனுஷா.ஆனால், அவர்களின் இந்த சந்திப்பு, சோஷியல் மீடியாவில், 'ட்ரெண்டிங்' ஆகிவிட்டதோடு, மூனுஷாவால் தான் தளபதி நடிகரின் ஆத்துக்கார அம்மணி, அவரை பிரிந்து விட்டதாகவும், 'பகீர்' செய்திகள் கொழுந்து விட்டு எரிந்தன.இதையடுத்து, இனிமேல் பொது இடங்களில் எக்காரணம் கொண்டும் தன்னை சந்திக்கக் கூடாது என, மூனுஷாவுக்கு அதிரடி உத்தரவு போட்டுள்ளார், தளபதி நடிகர்.சினி துளிகள்!* விஜயின், 69வது படத்தில், சமந்தா கதாநாயகியாக நடிக்கும் நிலையில், த்ரிஷாவும் அந்த படத்தில் இணைந்து விட முயற்சி எடுத்து வருகிறார்* 'தற்போது வரை நான் யாரையும், 'லவ்' பண்ணவில்லை. இனிமேல் யாரையாவது, 'லவ்' பண்ணினால் அதை வெளிப்படையாக சொல்வேன். மூடி மறைக்க மாட்டேன்...' என்கிறார், கீர்த்தி சுரேஷ்.* விஜய் சேதுபதி நடிப்பில்,* மகாராஜா படத்தை ' இயக்கினார், நித்திலன் 2 சுவாமிநாதன். அடுத்து, நயன்தாரா நடிப்பில், மகாராணி என்ற படத்தை இயக்கப் போகிறார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !