இதப்படிங்க முதல்ல...
உருக்கமான காதல் கதைகள் தேடும், விஜய் சேதுபதி!கடந்த, 2018ல், விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் இணைந்து நடித்த, 96 என்ற காதல் படம், இப்போது வரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது.இந்நிலையில், மீண்டும் அதுபோன்ற காதல் கதையில் நடிக்க விரும்பும், விஜய் சேதுபதி, தன்னிடம் கதை சொல்ல வரும் இளவட்ட இயக்குனர்களிடம், '96 படத்தைப் போன்று உருக்கமான காதல் கதைகள் இருந்தால் சொல்லுங்கள். 'ஆக்ஷன்' கதைகளில் நடித்தாலும், இடையிடையே ஒரு காதல் கதையிலும் நடிக்கப் போகிறேன்...' என்கிறார். — சினிமா பொன்னையாமுடிவெட்ட ஒரு லட்சம் ரூபாய்!நடிகர் ரஜினியின் தலையில் வழுக்கை விழுந்து விட்டது. இருப்பினும், மீதமுள்ள முடிகளை ஸ்டைலாக பராமரிக்க, பாலிவுட்டை சேர்ந்த, 'ஹேர் டிரஸ்சர்' ஆலிம் ஹக்கீம் என்பவரை, சென்னைக்கு வர வைக்கிறார். தன் தலை முடியை ஒரு தடவை, 'கட்டிங்' செய்வதற்கே அவருக்கு, ஒரு லட்சம் ரூபாய், சம்பளம் கொடுக்கிறார், ரஜினிகாந்த்.ரஜினி மட்டுமின்றி, மகேஷ் பாபு, ராம்சரண், ரன்பீர் கபூர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.தோனி, விராட் கோலி போன்ற பிரபலங்களுக்கும், ஹேர் டிரஸ்சராக இருந்து வருகிறார், ஆலிம் ஹக்கீம்.சி.பொ.,அடுத்த ரவுண்டுக்கு தயாராகும், அமலா பால்!இரண்டாவது திருமணம் செய்து கொண்ட, அமலாபால், ஒரு மகனை பெற்றெடுத்து, அம்மாவாகி விட்டார். தற்போது, தன் உடற்கட்டை, 'ஸ்லிம்' ஆக்கி, மீண்டும், தனுஷ் போன்ற தன் அபிமான, 'ஹீரோ'களிடம் வாய்ப்பு கேட்டு துரத்தி வருகிறார்.மேலும், எப்போதும் போல் எந்தவித ஆடை கட்டுப்பாடும் இல்லாமல், கதாபாத்திரத்திற்கு தேவையான அளவு, 'கிளாமர்' ஆக நடிப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக, உறுதி அளிக்கிறார், அமலாபால்.எலீசாவில்லனாக நடிக்க விரும்பும் நடிகர்கள்!'ஹீரோ' மார்க்கெட் ஸ்டெடியாக இருந்த போதே தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, பல மொழி படங்களில் வில்லனாகவும் நடித்தார், விஜய் சேதுபதி.தற்போது, தங்களது மார்க்கெட் சரிந்து கிடப்பதால், ரவி மோகன் மற்றும் ஆர்யா போன்ற நடிகர்களும், விஜய் சேதுபதி பாணியில் மற்ற மொழிப்படங்களிலும் வில்லனாக நடித்து, தங்களது மார்க்கெட்டை இந்திய அளவில் விரிவுபடுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.- சினிமா பொன்னையாகறுப்புப் பூனை!வெளிநாடுகளுக்கு சென்று பாய் பிரண்டுகளுடன், 'லுாட்டி' அடிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வருவதால், உஷார் ஆகிவிட்டார், மூனுஷா நடிகை. தற்போது, வெளிநாடுகளுக்கு சென்றாலும், பாய் பிரண்டுகளுடன் பொது இடங்களுக்கு செல்வதில்லை.வெளியில் தலை காட்டாமல், தன் வழக்கமான ஸ்டார் ஹோட்டல் லுாட்டியை தொடர்ந்து வரும் அம்மணி, தான் வெளிநாடுகளுக்கு செல்வதைக் கூட, சினிமா வட்டார நண்பர்களுக்கு சொல்லாமல், 'சீக்ரெட்'டாக வைத்திருக்கிறார்.சினி துளிகள்* பேபி ஜான் என்ற ஹிந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ், தன் கணவரிடம் அனுமதி பெற்று மீண்டும், ரன்பீர் கபூருக்கு ஜோடியாக, மேலும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.* விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பின், தக்லைப் படத்தில் மீண்டும், சிம்புவுடன் தான் நடித்துள்ள, 'ரொமான்டிக்' காட்சிகள் இளவட்ட ரசிகர்களை வெகுவாக கவரும் என்கிறார், த்ரிஷாஅவ்ளோதான்!