இதப்படிங்க முதல்ல...
விஜய் பாணிக்கு மாறும், சிவகார்த்திகேயன்!நடிகர், விஜயை வைத்து தான் இயக்கிய, தி கோட் படத்தில் அவரது இளம் வயது, 'கெட்-அப்'பிற்காக அமெரிக்க நாட்டுக்கு சென்று, 'லோலா ஸ்டுடியோ'வில் நவீன தொழில்நுட்பத்தில் அவரை இளமையாக மாற்றினார் இயக்குனர், வெங்கட் பிரபு. தற்போது, நடிகர், சிவகார்த்திகேயன் நடிப்பில், 'சயின்ஸ் பிக்ஷன்' கதையை இயக்கப்போகும், வெங்கட்பிரபு, இந்த படத்திலும், நடிகர், சிவகார்த்திகேயனின் தோற்றத்தை மாற்றப்போகிறார். அதற்காக அவருடன், சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள அதே, 'ஸ்டுடியோ'வுக்கு சென்று, சில தோற்றங்களை வடிவமைத்திருப்பவர், அதில் ஒரு தோற்றத்தை தேர்வு செய்து, அதில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கப்போகிறார். — சினிமா பொன்னையா'பலான' காட்சிகளில் நடிக்க மறுத்த, நடிகை, கயாடு லோஹர்!டிராகன் படத்திற்கு பிறகு, இதயம் முரளி மற்றும் இம்மார்ட்டல் போன்ற தமிழ் படங்களில் நடித்துவரும் நடிகை, கயாடு லோஹர், சில படங்களை திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. அது குறித்து அவரிடம் கேட்டால், ' டிராகன் தமிழ் பட வெற்றிக்கு பிறகு, பல படங்கள் தேடி வந்தாலும், எல்லாமே என்னை ஆபாச நடிகையாக மாற்றும் கதாபாத்திரங்களாகவே இருந்தன. சிலர், 'பிட்' பட காட்சிகளை போன்று, 'சீன்' கூறினர். அதனால்தான் அந்த படங்களை தவிர்த்தேன்...' என்கிறார், கயாடு லோஹர்.— எலீசாசொல்லி அடிக்கும், பிரியங்கா சோப்ரா!தமிழ் சினிமாவில் நடிகர், விஜய் நடித்த, தமிழன் படத்தில் அறிமுகமானார் நடிகை, பிரியங்கா சோப்ரா. அதன்பின், ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமாகி, ஹாலிவுட்டில், ஆங்கில படங்களிலும் நடித்தார். தற்போது, ஆங்கிலம் உட்பட பல மொழியில் தயாராகும் இயக்குனர், ராஜமவுலியின், வாரணாசி படத்தில் நடித்து வருகிறார். அவரை, சில பாலிவுட் தயாரிப்பாளர்கள் ஹிந்தி படங்களில், நடிக்க வைக்க அணுகியபோது, 'நான் இப்போது ஹாலிவுட் நடிகையாகி விட்டேன். அதனால், 30 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன்...' என்று தடாலடியாக பதில் கொடுத்திருக்கிறார். இதனால், ஆரம்பத்தில், பிரியங்கா சோப்ராவை வளர்த்து விட்ட தயாரிப்பாளர்களே, அவரது சம்பளத்தை கேட்டு, தெறித்து ஓடிவிட்டன ர். — எலீசா'ஹீரோ'களை துரத்தும், துஷாரா விஜயன்!'என் தனித்திறமையை வைத்து சினிமாவில் சாதிப்பேன்...' என்று கூறிவந்த, நடிகை துஷாரா விஜயனுக்கு, 'டம்மி'யான வேடங்களே கிடைத்து, 'மார்க்கெட்'டை பிடிக்க முடியாமல் அல்லாடிக்கொண்டு இருக்கிறார். இந்நேரத்தில், என்னதான் நடிப்பு திறமை இருந்தாலும் 'ஹீரோ'களின் அரவணைப்பு இருந்தால் தான் சினிமாவில் கொடி நாட்ட முடியும் என்று சில அனுபவசாலி நடிகையர் கொடுத்த அறிவுரைபடி, இப்போது சில இளவட்ட 'ஹீரோ'களுடன் நட்பு வளர்த்து வரும், துஷாரா விஜயன், இதுவரை கோடு போட்டு நடித்தவர், இனிமேல் பக்கா, 'கமர்ஷியல்' நடிகையாக உருவெடுக்கவும் தான் தயாராக இருப்பதாக, 'ஸ்டேட்மென்ட்' வெளியிட்டுள்ளார். — எலீசாவாடகைத்தாய் தேடும், சமந்தா!இயக்குனர், விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நடிகை, நயன்தாரா, வாடகைத்தாய் மூலம், இரட்டை குழந்தைகளை பெற செய்தார். இந்நிலையில், சமீபத்தில், 'வெப் சீரியல்' இயக்குனரான, ராஜ் நிடிமொரு என்பவரை, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நடிகை, சமந்தாவும், விரைவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகி வருகிறார். இதற்காக, மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனை மூலம் ஆரோக்கியமான வாடகைத் தாயை தேடி வருகிறார், சமந்தா. — எலீசாரசிகர்களுக்கு உத்தரவு!சிறுவனாக இருந்தபோதே, 'ஐ எம் எ லிட்டில் ஸ்டார், ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்...' என்று பாட்டுப்பாடி நடித்தவர் நடிகர், சிம்பு. ஆனபோதும், இப்போது வரை அவரால், முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. தற்போது இயக்குனர், வெற்றிமாறன் இயக்கத்தில், அரசன் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை 'மெகா ஹிட்'ஆக்கி, அதன் மூலம், முன்னணி பட்டியலுக்கு வந்துவிட வேண்டும் என, திட்டமிட்டுள்ளார். அதோடு, 'இந்த படம் குறித்து, 'சோஷியல் மீடியா'வில் பரபரப்பு தகவல்களை தொடர்ந்து வெளியிட வேண்டும், படம் திரைக்கு வரும்போது இதுவரை இல்லாத அளவுக்கு, 'கட்-அவுட்' மற்றும் 'பேனர்'களை வைத்தும் அமர்க்களப்படுத்துங்கள்...' என்று முன்கூட்டியே தன் ரசிகர் மன்றங்களுக்கு உத்தரவு போட்டுள்ளார், சிம்பு.— சினிமா பொன்னையா.கருப்புப் பூனை!சமீபத்தில், இரண்டு, 'சூப்பர் ஹிட்' படங்களை கொடுத்த ஒரு இயக்குனர், சீயான் நடிகரிடம் கதை சொல்லி ஓ.கே., வாங்கி, இருந்தார். அவருக்கு, 'அட்வான்சும்' கொடுத்துள்ளார் அப்படத் தயாரிப்பாளர். ஆனால், திடீரென்று சீயான் நடிகர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருவதால், அவரை வைத்து படத்தை எடுத்தால் படுகுழியில் விழுந்து விடுவோம் என்று அப்படத்தையே கிடப்பில் போட்டு விட்டார், தயாரிப்பாளர்.இதையடுத்து, சீயானிடம் கொடுத்த, 'அட்வான்சை' தயாரிப்பாளர் திரும்ப கேட்டபோது, செம காண்டாகி விட்டார்், சீயான்.'என்னை, 'புக்' பண்ணி விட்டு, இப்போது படத்திலிருந்தே துாக்கி அவமானப்படுத்தியதற்காக நீங்கள் கொடுத்த, 'அட்வான்ஸை' திருப்பி தர முடியாது...' என்று கூறி விட்டார்.இந்த மோதலில் நடிகருக்கும், தயாரிப்பாளருக்குமிடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.சினி துளிகள்!* விக்ரம் நடிப்பில் ஒரு படம் இயக்க கதை சொல்லி இருந்த, இயக்குனர், பிரேம் குமார் இப்போது அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டார்.* 'என் மனதுக்கு திருப்தியான ஒரு படத்தில் நடித்து முடித்ததும், நடிப்பில் இருந்து ஓய்வெடுத்து கொள்வேன்...' என்கிறார், கமலஹாசன்.அவ்ளோதான்!