உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

அனிருத்தின், 'தீம் மியூசிக் டெக்னிக்!'தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, இந்தியா முழுவதையும், தன் இசையால் ஆட்டிப் படைக்கும், இசையமைப்பாளரான அனிருத், இப்போது ஒரு புதிய, 'டிரெண்டை' உருவாக்கியுள்ளார். படம் அல்லது பாடல்கள் வெளியாவதற்கு முன்னதாகவே, அப்படத்திற்கான அதிரடியான, 'தீம் மியூசிக் டிராக்'கை வெளியிட்டு, படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறார்.தெலுங்கு நடிகர், அல்லு அர்ஜுன் நடிக்கும், ராக்கா என்ற தெலுங்கு படத்திற்கு அவர் வெளியிட்ட, 'தீம் மியூசிக்' இந்திய அளவில், 'டிரெண்ட்'டாகி படத்திற்கான, 'ரேட்டிங்'கை எகிற வைத்துள்ளது. அனிருத்தின் இந்த, 'தீம் மியூசிக் டெக்னிக்' தீயாய் வேலை செய்கிறது. அதனால் இப்போது அவர் இசையமைக்கும் படங்களின் இயக்குனர்களே, 'முதல்ல, 'தீம் மியூசிக்' போடுங்க...' என்று அவரை கேட்கத் தொடங்கிவிட்டனர்.— சினிமா பொன்னையாஅஜித்துக்கு ஜோடியாகும், மகள் வயது நடிகை!நடிகர், ரஜினிகாந்த், தன் மகள் வயது நடிகையருடன் ஜோடி சேர்ந்தபோது, விமர்சனங்கள் எழுந்தன. அதனால், ரம்யா கிருஷ்ணன் போன்ற, 'மாஜி ஹீரோயினி'களை தனக்கு ஜோடியாக்கி வருகிறார், ரஜினி. இந்நிலையில், தற்போது, அஜித் குமாரின், 64-வது படத்திலும் இதேபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. 55 வயதாகும் அஜித்துக்கு ஜோடியாக, 25 வயதான, அசாமிலிருந்து தமிழுக்கு இறக்குமதியான, கயாடு லோஹர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தச் செய்தி வெளியாகி, விமர்சனங்கள் எழுந்ததால், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவரை அஜித்துடன், 'ரொமான்ஸ்' செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்காமல், வேறு ஒரு முக்கிய ரோலில் நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார்.— சி.பொ.,சாய் பல்லவியின் நம்பிக்கை!ஹிந்தி நடிகர், அமீர்கானின் மகன், ஜூனைத் கானுக்கு ஜோடியாக, சாய் பல்லவி நடித்த, ஏக் தின் என்ற ஹிந்தி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும், தற்போது பிரமாண்ட, பட்ஜெட்டில் ஹிந்தி மற்றும் பல மொழிகளில் தயாராகும் ராமாயணா படத்தில், சீதையாக நடித்து வரும், சாய் பல்லவி, இந்த படத்தை மலை போல் நம்பியுள்ளார்.'இதுவரை எத்தனையோ படங்களில் சீதை கதாபாத்திரம் வந்திருந்தாலும், என் நடிப்பில் ஒரு புதுமையான சீதையை ரசிகர்கள் பார்ப்பர். இனிவரும் காலங்களில், சீதை வேடத்தில் நடிக்கும் நடிகையர்களுக்கு, என் நடிப்பு ஒரு முன்மாதிரியாக இருக்கும்...' என்று அடித்துக் கூறுகிறார், சாய் பல்லவி.— எலீசாதமிழுக்கு வரும், ஜான்வி கபூர்!மறைந்த நடிகை, ஸ்ரீதேவியின் மகளான, ஜான்வி கபூர், ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அதையடுத்து, தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறி வந்தார். ஆனால், யாரும் அவரை தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யவில்லை.இதனால், காத்திருந்து பார்த்த ஜான்வி கபூர், இப்போது, இயக்குனர், சற்குணம் இயக்கும், குருவின் மனைவி என்று பொருள் தரும் 'குரத்தி' என்ற, 'வெப்' தொடர் மூலம் தமிழுக்கு வரப்போகிறார். இந்தத் தொடரில், ஜான்வி கபூர் முன்னணி கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார்.— எலீசாமீண்டும், 'ஸ்கிரிப்ட்' எழுதும், விஷால்!இயக்குனராக அவதாரமெடுத்து, மகுடம் படத்தை இயக்கி நடித்துள்ள, விஷால், அடுத்தபடியாக, இயக்குனர், சுந்தர்.சி இயக்கும், புருஷன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், அடுத்து தன்னை வைத்துப் படம் இயக்க புதிய கதைகள் எதுவும் கிடைக்காததால், தனக்கான கதையைத் தானே எழுதத் தொடங்கிவிட்டதோடு, 'நான் சினிமாவுக்குள் நுழைந்ததே ஒரு இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் தான். அது இப்போது தான் நனவாகிறது...' என்கிறார், விஷால். அடுத்ததாக தான் இயக்கவிருக்கும் புதிய படத்தை பிரமாண்ட, 'பட்ஜெட்'டில் பலமொழி படமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.— சினிமா பொன்னையாகருப்புப் பூனை!மனைவியை பிரிந்து விட்ட, சுள்ளான் நடிகர் குறித்து, ஊடகங்களில் கிசுகிசுக்கள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி தன்னை பற்றி வெளியாகும் செய்திகளை பார்த்து, கடும் கொந்தளிப்பில் காணப்படும் சுள்ளான், சமீபத்தில், தன்னை சந்தித்த சில ஊடகவியலாளர்களிடம், 'வெளியுலகில் யாருமே ஆண்கள், பெண்களுடன் நட்பாக பழகுவது இல்லையா. சினிமாக்காரர்கள் பழகினால் மட்டும் ஏன் அதை தவறான கோணத்தில் பூதக்கண்ணாடி போட்டு பார்க்கிறீர்கள். இனிமேல், சக நடிகையருடன் என்னை இணைத்து யார் செய்தியை பரப்பினாலும், அந்த ஊடகங்கள் மீது, சைபர் கிரைமில் புகார் அளிப்பேன்...' என்று எச்சரித்துள்ளார், சுள்ளான்.*****தான் நடிக்கும் பல படங்களை தயாரித்து நடித்துள்ள, இசையமைப்பாளராக இருந்து நடிக்க வந்த நடிகர், தன் படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்து வருவதால், நடித்து சம்பாதித்து வாங்கிய இரண்டு வீடுகளை விற்று விட்டார். அதோடு, சில பைனான்சியர்களிடம் கடன் வாங்கி, படம் எடுத்தும் வசமாக சிக்கியிருக்கிறார். அதன் காரணமாக, இனிமேல் சொந்த படம் எடுக்க போவதில்லை என்று முடிவெடுத்துள்ள இசையமைப்பாளரான நடிகர், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், 'படங்களில் நடிக்க நான் தயார். ஆனால், தயாரிப்பாளரை நீங்கள் தான் தேடிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து படம் தயாரித்தால், நான் பிச்சைக்காரனாகி, வீதிக்கு வந்து விடுவேன்...' என்று சொல்லி புலம்பி வருகிறார்.சினி துளிகள்!* இட்லி கடை படத்தை அடுத்து, தற்போது, இயக்குனர், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தான் நடிக்கும், ஓம் தமிழ் படத்தையும் தனுஷே தயாரிக்கிறார்.* இயக்குனர், சசி இயக்கத்தில் நடித்த, நுாறு சாமி படத்தை அடுத்து, லாயர் என்ற தமிழ் படத்தில் நடிக்க போகிறார், விஜய் ஆன்டனி.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !