வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Natarajan Ramanathan
நவ 09, 2026 18:36
நடிக்க வருவதற்கு முன்பாக சாலை ஓரம் தேங்கிய மழைநீரை குடித்தவர்தான் கயாடு லோஹர்.
பழைய படங்களை, 'ரீ-மேக்' செய்யும், சந்தானம்!சந்தானத்துக்கு பிறகு, 'ஹீரோ'வாக நடித்து வந்த சூரி, தற்போது, வசூல் நாயகனாக மாறிவிட்டார். அதையடுத்து, தானும் அதுபோல், அதிரடி படங்களில் நடித்து, 'சூப்பர் ஹிட்' படங்கள் கொடுத்து, சூரியை முந்திவிட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார், சந்தானம். தற்போது, ரஜினி நடித்த, அதிசய பிறவி படத் தலைப்பில், புது படமொன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். அடுத்தபடியாக, அஜித் மற்றும் விஜய் நடித்து, 'சூப்பர் ஹிட்'டான படங்களின், 'ரீ-மேக்' படங்களிலும் நடிக்க திட்டமிட்டுள்ளார், சந்தானம். அப்படங்களை, 'மெகா பட்ஜெட்'டில் தயாரித்தால் தான் தன் இலக்கை அடைய முடியும் என்பதற்காக, தாராளமாக செலவழிக்கக்கூடிய தயாரிப்பாளர்களை தேடி வருகிறார். — சினிமா பொன்னையாமீண்டும், ரஜினிக்கு வில்லனாகும், விஜய் சேதுபதி!ஏற்கனவே, பேட்ட படத்தில், ரஜினிக்கு வில்லனாக நடித்தவர், விஜய் சேதுபதி. தற்போது, ரஜினி நடித்து திரைக்கு வந்துள்ள, ஜெயிலர் 2 படத்தில் அவர் ஒரு, 'கெஸ்ட் ரோலில்' நடித்திருந்தார். அதையடுத்து, ரஜினி நடிக்க இருக்கும், ஜெயிலர்-3 படத்தில் அவரது இந்த 'கெஸ்ட் ரோல்' தான் வில்லன் கதாபாத்திரமாக மாற இருக்கிறதாம். அதாவது, ஜெயிலர் முதல் பாகத்தில் மலையாள நடிகர் விநாயகன் நடித்தது போன்று, ஜெயிலர் படத்தின் மூன்றாம் பாகத்தில், விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தான் மெயின் வில்லன் கதாபாத்திரமாக இடம் பெற போகிறதாம். — சினிமா பொன்னையாஇயக்குனர், செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ்!இயக்குனரும், நடிகருமான, செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடித்து, கடந்த 2006ம் ஆண்டு வெளியான படம், புதுப்பேட்டை. இப்படம், தனுஷுக்கு ஒரு மைல்கல் படமாக அமைந்தது.தற்போது, புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்திலும், தனுஷ் நடிக்கவுள்ள நிலையில், முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகத்தின் கதையையும் உருவாக்கியிருப்பதாகக் கூறும் செல்வராகவன், 'தற்போது, கைவசம் உள்ள படங்களில், தனுஷ் நடித்து முடித்ததும், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்...' என்கிறார். — சி.பொ.,'மார்க்கெட்'டை பிடித்த, மிர்னா மேனன்!ஜெயிலர் படத்தின் இரண்டு பாகங்களிலும், ரஜினியின் மருமகளாக நடித்த, மலையாள நடிகை, மிர்னா மேனனின், 'மார்க்கெட்' சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. அதன் காரணமாக தற்போது, நடிகர், அருண் விஜய்க்கு ஜோடியாக, இருளன் என்ற படத்தில் நடித்து வரும் அவர், மேலும் இரண்டு படங்களில், நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 'ரஜினி படத்தில் நடித்த ஒரு சிறிய கேரக்டர் கூட சினிமாவில் கவனம் பெற்றுவிடும் என்பதற்கு நானே சிறந்த உதாரணம். 'சினிமாவில் நீ பெரிய லெவலுக்கு வருவாய்' என்று, ரஜினி எனக்கு கொடுத்த ஆசீர்வாதமும் பலிக்கப் போகிறது...' என்கிறார். — எலீசாகருப்புப் பூனை!முகமூடி என்ற பொ ருள் தரும் படத்தில், 'ஹீரோயினாக' நடித்த நடிகை நீண்ட காலமாகவே, கொலவெறி இசையமைப்பாளருடன் அந்தரங்க காதலியாக வாழ்ந்து வந்தார். இதன் காரணமாக, 'இன்றில்லாவிட்டாலும், ஒருநாள் கண்டிப்பாக தன்னை முழுசாக அரவணைத்துக் கொள்வார்...' என்று, நடிகை எதிர்பார்த்திருந்த நேரத்தில், தற்போது, வேறு ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டத் தயாராகிவிட்டார், கொலவெறி. இதன் காரணமாக, அவர் மீது கொலவெறியில் இருக்கும் நடிகை, சமீபத்தில் அவருக்கு போன் செய்து, 'என் வாழ்க்கையை நாசப்படுத்திய உன்னை சும்மா விட மாட்டேன். அடுத்தடுத்து நாம் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு, உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன்...' என்று, அவரை கடுமையாக எச்சரித்திருக்கிறார். இதன் காரணமாக, 'குடும்பம், குடித்தனம் என்று ஆனபிறகு அந்த வீடியோக்களை வெளியிட்டு, தன் அந்தரங்க லீலைகளை வெளிச்சம் போட்டு காட்டி விடுவாரோ நடிகை...' என்று உச்சகட்ட அதிர்ச்சியில் இருக்கிறார், கொலவெறி. *******சினி துளிகள்! * பிசாசு மற்றும் மாஸ்க் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்ததில் எதுவும் வெற்றி பெறாததால், தற்போது குணச்சித்திர வேடங்களில் நடிப்பதில் தன் கவனத்தைத் திருப்பியுள்ளார், ஆண்ட்ரியா. * ஏஸ் மற்றும் மதராசி படங்களுக்கு பிறகு, மீண்டும் தமிழில் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார், கன்னட நடிகை, ருக்மணி வசந்த். * பிரபாஸ் நடித்து வெற்றி பெற்ற, கல்கி 2898 ஏடி என்ற பலமொழி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தை போல இதிலும், மீண்டும் வில்லனாக நடிக்கிறார், கமல்ஹாசன். * அசாமிலிருந்து தமிழுக்கு வந்த நடிகை, கயாடு லோஹர் குடிக்கும் ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை, மூன்று லட்சம் ரூபாய்.அவ்ளோதான்!
நடிக்க வருவதற்கு முன்பாக சாலை ஓரம் தேங்கிய மழைநீரை குடித்தவர்தான் கயாடு லோஹர்.