உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

கமல் கொடுத்த அதிர்ச்சி!கமல்ஹாசன் தயாரித்த, அமரன் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், மீண்டும் அவர் தயாரிக்கும், சேயோன் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் காட்சிகளை பார்த்த, கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் நடித்த பல காட்சிகள் தனக்கு திருப்தி இல்லை என்று கூறி, 'எப்படி நடிக்க வேண்டும்' என்று தாமே நடித்துக் காட்டி, அதே, 'பர்பாமன்ஸை' கொடுக்குமாறு அவருக்கு, 'ஆர்டர்' போட்டுள்ளார். இதனால், சேயோன் படத்துக்காக படமாக்கப்பட்ட காட்சிகள் தற்போது, 'ரீ-ஷூட்' செய்யப்படுகின்றன. — சினிமா பொன்னையாஜேசன் சஞ்சய், 'ஹீரோ' அவதாரம்!தமிழக முதல்வர், விஜயின் மகனான, ஜேசன் சஞ்சய் இயக்கிய முதல் தமிழ் படமான, சிக்மா எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால், 'ஹீரோ' அவதாரம் எடுக்கிறார், ஜேசன். அவர் நடிக்கும் முதல் படத்தை, விஜய் நடிப்பில், தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய, இயக்குனர், அட்லி தயாரிக்கிறார். இப்படத்திற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த ஜேசன், தற்போது, டியூட் என்ற தமிழ் படத்தை இயக்கிய, கீர்த்தீஸ்வரன் சொன்ன கதையை ஓ.கே., செய்துள்ளார். குறிப்பாக, இந்த கதை, விஜயின் படங்களைப் போல, 'மாஸ்' மற்றும் 'ஆக்ஷன்' கலந்த காதல் கதையாக உருவாகிறது. —  சினிமா பொன்னையா'கிளாமர்' களத்தில் இறங்கும், அதிதி ஷங்கர்!இயக்குனர், ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்தபோது, கிடைத்த வரவேற்புக்கு பிறகு, மற்ற முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டன. இருப்பினும், சினிமாவை விட்டு வெளியேற விரும்பாத, அதிதி ஷங்கர், அடுத்து கவர்ச்சி, 'ரூட்'டுக்கு மாறப்போவதாக சொல்லி, 'கிளாமர்' போட்டோ ஆல்பத்தை தமிழ் மற்றும் தெலுங்கு இயக்குனர்களின் பார்வைக்கு சுழலவிட்டுள்ளார். அதோடு, முன்னணி, 'ஹீரோ'களின் படங்களில் குத்தாட்டம் ஆடவும் தான் தயார் என்று, 'கிரீன் சிக்னல்' போட்டுள்ளார். —  எலீசாஅரசியலுக்கு வர தயாராகும், த்ரிஷா!நடிகை, த்ரிஷாவைப் பொறுத்தவரை தன்னைப் பற்றி எப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும், அதைப் பற்றி துளி கூட கவலைப்படாமல் தன் போக்கில் போய்க்கொண்டே இருப்பார். இந்த நிலையில்தான், கோவையில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு சென்ற இடத்தில், 'ரோடு ஷோ' நடத்தினார்.தற்போது, தனக்கான பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால், ஒரு முக்கிய அரசியல் கட்சி அலுவலகத்துக்கு அவ்வப்போது, 'விசிட்' அடித்து வருகிறார், த்ரிஷா. இந்நிலையில், த்ரிஷாவின் சினிமா நண்பர்கள் சிலர், 'அரசியலில், 'என்ட்ரி' கொடுக்க ஒத்திகை நடத்துகிறீர்களா?' என்று கேள்வி கேட்டபோது, 'இறைவனின் சித்தம் அதுவாக இருந்தால், அது நடந்தே தீரும்...' என்று பதிலளித்துள்ளார். — எலீசாகறுப்புப் பூனை!தளபதி நடிகர் படத்தில், 'என்ட்ரி' கொடுத்த, 'பீஸ்ட்' பட நடிகை, அதன் பிறகு, காஞ்சனா நடிகரின் படத்தில் நடித்த பிறகும், தமிழில் புதிய படங்கள் எதுவும் ஒப்பந்தமாகவில்லை. இதனால், விரக்தி அடைந்த நடிகை, 'கோலிவுட்' எனப்படும் தமிழ் சினிமா உலகை விட்டு, 'டோலிவுட்' எனப்படும் தெலுங்கு திரையுலகு பக்கம், 'ரூட்'டை மாற்றி, சென்றுவிட்டார்.ஆனால், அம்மணி சென்னையில் முகாமிட்டிருந்தபோது, வாரந்தோறும், தன் அபிமானிகளுக்கு 'மிட்-நைட் பார்ட்டி' கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வந்தார். 'மிட்-நைட் பார்ட்டி'யில் மதிமயங்கி கிடந்த சில, 'கோலிவுட் ஹீரோ'கள், தற்போது அம்மணியை காணாமல், அல்லாடி வருகின்றனர். சினி துளிகள்!ஹிந்தியில் நடித்த, ராமாயணா படத்திற்கு பின் தன் படக்கூலியை, 6 கோடி ரூபாயாக உயர்த்தியுளளார், சாய் பல்லவி.அஜித் நடிக்கப் போகும், டேர் டெவில் தமிழ் படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார், பார்த்திபன்.காஞ்சனா- 4 படத்தில் நடித்த பின், தமிழில் பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை என்பதால், மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்க சென்று விட்டார், பூஜா ஹெக்டே.தனுஷ் நடிப்பில், இயக்குனர், ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள, ஓம் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !