தொட்டிலில் துாங்கும் கண்ணன்!
நாகர்கோவில் வடசேரிக்கு அருகில் உள்ள, ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில், உற்சவர் விக்ரகம் குழந்தை வடிவில் உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி அன்று, அர்த்தஜாம பூஜை முடிந்ததும், அலங்கரித்த தொட்டிலில் பட்டுத் துணி விரித்து, கண்ணனை படுக்க வைத்து, நாதஸ்வரத்தில், தாலாட்டு இசைப்பது வழக்கம். குழந்தை செல்வம் இல்லாத தம்பதியர், இந்த காட்சியைத் தரிசித்தால் மகப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.