கார்த்திகை தீபம்!
தமிழ் மாதங்களில் ஒன்றான கார்த்திகையில் பவுர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நன்னாள், கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது.* கார்த்திகை திருநாள் என்றதும் நம் நினைவிற்கு வருவது, தீப விளக்குகளும், திருவண்ணாமலை தீபமும் தான். முக்தி தரும் தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருநாளன்று, திருவண்ணாமலை அடிவாரத்தில் பரணி தீபமும், மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்* திருவண்ணாமலையில் மலை உச்சியில், மாலை 6.00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். அதன் பிறகு 6.05 மணிக்கு மேல், வீடுகளில் திருவிளக்குகளை ஏற்றி அலங்கரிக்கலாம்* புதிதாக சில விளக்குகளை வாங்கி, அதனோடு பழைய விளக்குகளையும் சேர்த்து விளக்கு ஏற்றுவது நல்லது. அகல் விளக்குகளை தண்ணீரில் நனைத்து காயவைத்து, மஞ்சள் மற்றும் குங்குமம் பூசி தயார் செய்து கொள்ள வேண்டும்* கார்த்திகை தீபத்திருநாளன்று, அகல் விளக்குகளில் பஞ்சு திரியிட்டு, நல்லெண்ணெய் அல்லது பஞ்ச கூட்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். ஒரேயொரு நெய் விளக்காவது ஏற்றுவது சிறப்பானது* வீடுகளில், 27 அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். வீட்டு வாசலில் கோலத்தின் மீது தாம்பூலம் அல்லது மனை பலகை வைத்து, ஐந்து முக குத்துவிளக்கு ஏற்றி வழிபடுவது சிறந்தது.