கவிதைச்சோலை: பாராட்ட கற்றுக் கொள்வோம்!
பாராட்ட கற்றுக் கொள்வோம் - அதுகொடுப்பவர்களுக்கும்பெறுபவர்களுக்கும்ஆழ்ந்த பந்தத்தை ஏற்படுத்தும்!சிறிய பாராட்டும்மொட்டுக்களை பூக்க செய்யும்காய்களை கனியாக்கும்!பாராட்டுங்கள் - அதுமகிழ்ச்சியின் ஊற்றுசெலவில்லாத ஊக்க மருந்து!முதுகுக்கு பின் செய்யும்செயல் ஒன்று தான் - அதுதட்டிக்கொடுத்து பாராட்டுவது!பாராட்டுவதால் எந்தகவுரவமும் தொலைந்து போகாது...பாராட்டு பெறுபவர்கள்கர்வமும் கொள்ளப் போவதில்லைகொஞ்சமாக குளிர் தென்றலைவீசிவிட்டு போகும் அவ்வளவே!குறைக் கூறுவது கோழைத்தனம்மற்றவர்களை குறைக் கூறி தாழ்த்துவதால்நாம் ஒரு முழமேனும்உயர்ந்து விட போகிறோமா?தகுதியில்லாதவரை பாராட்டுதல்கள்ளச் சந்தையில்பொருளை விற்பதற்கு சமம்!இனிய வார்த்தைகளை கொட்டுவதால்நாக்கு காயப்படப் போவதில்லை...தட்டிக் கொடுப்பதால்கைகள் முறிந்தும் விடாது!சின்ன சின்ன பாராட்டுகளுக்குஏங்குவது மனித இயல்பு...பாராட்டு பசிக்குநாவால் தீர்வு சொல்வோம்!கேட்பவர் இதயம் மலரும்செயல்கள் சிறகை விரித்துவெற்றி வாகை சூடும்!பாராட்ட கற்றுக்கொள்வோம் - அதுநம் மதிப்பை மேலும் உயர்த்தும்!செல்வி நடேசன், சென்னை.