உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: வீட்டை காக்கும் காவலர்!

ஜூன் 15 - தந்தையர் தினம்ஊரை காப்பவர்அய்யனார் சாமிஎன்றால், வீட்டை காப்பவர் தந்தை தான்!நாட்டை காப்பது மன்னர் என்றால்வாழும் குடும்பத்தை காப்பவர் தந்தை தான்!தோட்டத்தை காப்பவர் காவலாளி என்றால்குடும்பத்தை காப்பவர்தந்தை தான்! காட்டை காப்பது சிங்கம் என்றால் வீட்டை காப்பது தந்தை தான்!நாட்டின் எல்லையை காப்பது ராணுவ வீரர் என்றால் குடும்பத்தை காப்பவர் தந்தை தான்! கண்களை காப்பது இமை என்றால்குடும்பத்தை காப்பது தந்தை தான்!கட்டடங்களை தாங்குவது துாண்கள் என்றால் வீட்டை தாங்குவது தந்தை தான்! வீட்டின் தலைவனே முதன்மையானவர் இவரே குடும்பத்தை தாங்கும் துாண்கள்! வீட்டையும், குடும்பத்தையும் தாங்கும் தலைவனான தந்தை இவரே உண்மையான குடும்பத்தின் கதாநாயகன்! அவர் பெற்ற பிள்ளைகளுக்கு பாதுகாக்கும் தடுப்பு சுவராய் இருப்பவர் குடும்பத்தின் ஆணி வேராய் காப்பவர்! தந்தையின் உழைப்பின்வியர்வையால் குடும்பத்தின்மகிழ்ச்சி விதைகள்வளர்ந்து நறுமண பூக்களாகின்றன! — எம்.பாலகிருஷ்ணன், மதுரை. தொடர்புக்கு: 99445-65266


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !