கவிதைச்சோலை: இளைய பாரதம்!
காசு கொடுத்து வாங்கவில்லை என்றாலும் காவு கொடுக்காத குடும்பங்கள் இல்லையென சொல்லும் அளவுக்கு சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் - அதைக் கொண்டாடுவதை விட கொடுத்து உணர்வதே சுதந்திரத்தின் முழுமை! எதை வேண்டுமானாலும் பேசி செல்ல வாங்கவில்லை சுதந்திரம் பேசியதை செயலாக்குவதே முழுச்சுதந்திரம்! மதுவுக்கு அடிமையாகி மாண்டபின் மானியம் வாங்கிட வாங்கவில்லை சுதந்திரம் மாற்றி முயற்சித்து மதியால் பிழைத்திடவே முழுச் சுதந்திரம்! பதவியை வைத்து பத்தும் செய்ய வாங்கவில்லை சுதந்திரம் பத்திரமாக மக்களை வாழ வைக்கவே முழுச் சுதந்திரம்! சொத்து சேர்க்க இயற்கையை அழிக்க வாங்கவில்லை சுதந்திரம் செத்து விடாமல் சுற்றுச்சூழலை காக்கவே முழுச் சுதந்திரம்! மீனவர் உயிரும் ராணுவ வீரர் உயிர் போல மதிப்பதற்காகவே முழுச்சுதந்திரம்! தேசியத் தலைவர்கள் சிந்திய ரத்தம் எழுதிய இந்தியா எனும் சித்திரம்... இளையோர் கையில் வந்து விடட்டும்! இயற்கைப் பூங்கா இந்தியா என்பது நிச்சயம் சுதந்திரம் படைப்பதோர் சரித்திரம்! ஜெய் ஹிந்த் - சு.பிரபாகர், மதுரை. தொடர்புக்கு: 91594 07208