உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: காதல் புனிதமானது!

காதல் ஒன்றும் கசங்கிய காகிதம் அல்ல குப்பையில் துாக்கி எறிந்துவிட்டு போவதற்கு! காதல் என்பது ஒருநாள் நட்பு அல்ல பேசிவிட்டு மனம் போன போக்கில் பிரிந்து செல்வதற்கு! காதல் ஒன்றும் உணர்ச்சியற்ற பொம்மை அல்ல தொட்டு பார்த்து ரசித்து விட்டு வந்த வழியே போவதற்கு! காதல் ஒன்றும் வியாபார பொருள் அல்ல விற்பனை செய்து தொழிலை பெருக்குவதற்கு! காதல் என்பது விளையாட்டு அல்ல வெற்றி தோல்விகளை உறுதி செய்வதற்கு! காதல் எனப்படுவது துாக்கத்தில் வரும் கனவு அல்ல பொழுது விடிந்தால் கலைந்து மறைவதற்கு! காதல் ஒன்றும் கற்பனை ஓவியமல்ல வார்த்தைகளால் செதுக்கி கவிதையை மட்டும் வடிப்பதற்கு! காதல் புனிதமானது காதல் சுகமானது காதல் மனிதநேயம் மிக்கது காதலை நேசிப்போம் உயிர் கொடுப்போம்! - மணியட்டிமூர்த்தி, கோவை. தொடர்புக்கு : 7708771321


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !