உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: தேர்தல் களம் 2026!

வாக்குரிமை என்பது நாட்டின் தலை எழுத்தை திருத்தி எழுத நமக்கு கிடைத்த எழுத்தாணி... திருத்தி எழுதுங்கள் தேசம் செழிக்கட்டும்! மக்களே ஈடு இணையில்லா தலைவர்களை தேடுங்கள்... இலவசங்களை தேடாதீர்கள்! நாட்டை வளர்க்கும் தலைவர்களை தேடுங்கள்... நாடக தலைவர்களை தேடாதீர்கள்! புகழை நேசிக்கும் தலைவர்களைக்கூட தேர்ந்தெடுங்கள்... பணத்தை நேசிக்கும் தலைவர்கள் வேண்டாம்! ஆயிரங்களை விட்டெரிந்து கோடிகளை கொள்ளையடிக்கும் அரசியல் வேண்டாம்! பணத்திற்காக உடலை விற்பவளும் பணத்திற்காக வாக்குரிமை விற்பவர்களும் ஒன்று தான்! மக்களே உதவித்தொகையும் ஊக்கத்தொகையும் உங்கள் தலைமுறையை முன்னேற்றாது உழைப்பும் கல்வியுமே உங்களை மேன்மையுறச் செய்யும்! நல்ல தலைவர்களால் நாடு வளரும்போது ஒவ்வொரு வீடும் தானாக வளரும்! உங்கள் நாடி பிடித்து பார்க்காமலேயே இலவசங்களாலும் சில ஆயிரங்களாலும் உங்களை வீழ்த்த முடியும் என்று அரசியல் தலைவர்கள் நம்புகின்றனர்! மாறுங்கள் மக்களே முதலில் உங்களிடம் தான் மாற்றம் வேண்டும்... உங்கள் மனநிலை மாறினால் தலைவர்களின் மனநிலையும் மாறும்! வாக்களியுங்கள்... தமிழகம் மொழியில் மட்டும் மூத்த மொழியாக இல்லாமல் அரசியலிலும் மூத்த அரசியலை உண்டாக்கட்டும்! — க.ஆனந்தகுமார், பழனி. தொடர்புக்கு: 8925437206


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !