உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: வாழ்வின் வளமான நெறிகள்!

பொன் பொருளை இழந்தாலும் மறுபடியும் சம்பாதிக்கலாம் மதிப்பும் மரியாதையும் இழந்தால்மறுபடியும் கிடைக்காது! வசதி வாய்ப்புகளை இழந்தாலும் மறுபடியும் அவை கிடைக்கலாம் நேர்மையும் கண்ணியத்தையும் இழந்தால் மறுபடியும் வராது! வயல் தோப்புகளை இழந்தாலும் மறுபடியும் அவை கிடைக்கலாம் உன் நன்னடத்தையும் பொறுமையையும் இழந்தால் மறுபடியும் அவை கிடைக்காது! நீ வரைந்த ஓவியங்கள் தொலைந்தால் மறுபடியும் கிடைக்கலாம் வாக்குறுதியும் செய்நன்றியும் மறந்தால் மறுபடியும் அவை வாராது! நீ வடித்த சிற்பங்களை இழந்தாலும் அவை மறுபடியும் கிடைக்கலாம் உன் கருணையும் அன்பும் போனால் மறுபடியும் கிடைக்காது! நீ படைத்த புத்தகங்களும் சுவடுகளும் தொலைந்தால்மறுபடியும் கிடைக்கலாம் உன் சுயகவுரவத்தை இழந்தால் மறுபடியும் அவை கிடைக்காது! நீ எதை இழந்தாலும் வாழ்க்கையில் உன் தன்மானத்தையும் ஒழுக்கநெறிமுறைகளையும் இழக்காமல் வாழ்ந்தால் தான்உன் மதிப்பு என்றும் தேயாது! எப்படியும் வாழ்வதல்ல வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்வதே உண்மையான வாழ்க்கை அதுதான் மற்றவர்களுக்குநீ கொடுக்கும் நம்பிக்கை! - எம்.பாலகிருஷ்ணன், மதுரை. தொடர்புக்கு: 99445 65266


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !