மருத்துவ டிப்ஸ்!
* பீட்ரூட்டைத் துருவி, அதனுடன் துருவிய தேங்காய் சிறிதளவு, நறுக்கிய பேரீச்சம்பழம், பொடித்த வெல்லம் கலந்து லட்டு மாதிரி உருண்டை பிடித்து சாப்பிட, ரத்த சோகை நீங்கி, உடல் ஆரோக்கியம் பெறும் * உள்ளங்கை அளவு நாட்டு ஓட்டை(ஓடு) எடுத்து, நன்றாக தீயில் பழுக்க சூடாக்கி, அதன்மீது, அரசமர இலைகள் மூன்று போட்டு மூடி, அதில் குதிகாலை வைத்து அழுத்தினால், விரைவில் குதிகால் வலி போய் விடும் * அடிக்கடி தாகம் எடுத்தால் விளாம்பழத்தைச் சாப்பிட்டு குணமடையலாம் * காபி, டீக்குப் பதிலாக, புழுங்கல் அரிசி, மிளகு, சுக்கு, உப்பு சேர்த்து கஞ்சி வைத்துச் சாப்பிடலாம். இது, வயிற்றிலுள்ள புண்ணை ஆற்றுவதோடு, ஜலதோஷம் மற்றும் இருமல் வராமல் தடுக்கும்.