உள்ளூர் செய்திகள்

நடந்தது என்ன?

ஆகஸ்ட் 11, 1948 - லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டி துவங்கியது. லண்டன் ஒலிம்பிக்ஸின் மற்றொரு சிறப்பு, முதல் முதலாக, 'டிவி'யில் ஒலிம்பிக் போட்டி ஒளிபரப்பப்பட்டது. * 1954 - கன்னியாகுமரி -- செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கக் கோரும் போராட்டத்தில், 16 தமிழர்கள், காவல் துறையினரால் சுடப்பட்டு மாண்டனர். * 1961 - இந்தியாவில், போர்த்துகீசியர் வசம் இருந்த தாத்ரா மற்றும் நாகர்ஹவாலி ஆகிய பகுதிகள் விடுதலை பெற்று, இந்தியாவுடன் இணைந்தன.* 1962 - வேஸ்டாக் 3 விண்கலம், சோவியத் ஸ்பேஸ் ஏஜென்சி மூலம் விண்ணில் பறந்தது. அப்போது, நான்கு நாட்களில்,64 முறை பூமியை சுற்றி வந்தது. * 1964 - தி பீட்டில்ஸ் பாடகர்களின் முதல் திரைப்படமான, ஏ ஹார்ட் டே நைட் வெளியானது. அன்று முதல் இன்று வரை, சிறந்த கிளாசிக் படங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.* 1984 - அமெரிக்காவின், கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், ஓட்டப்பந்தய வீரரான, கார்ல் லுாயிஸ், நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார். ஏற்கனவே, 1900 மற்றும் 1936ம் ஆண்டுகளில், நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.-சிறப்பு தினங்கள்: * தேசிய மகன் மற்றும் மகள் தினம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !