நடந்தது என்ன?
ஆகஸ்ட் -18, 1868 - பிரெஞ்சு விண்வெளி ஆய்வாளர், பிளேயர் ஜான்சென் என்பவர், சூரிய கிரகணத்தை ஆய்வு செய்த போது, ஹீலியம் என்ற வாயுவை கண்டுபிடித்தார்.* 1920 - பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கும் சட்டம், அமெரிக்காவில் நிறைவேறியது.* 1923 - முதன் முதலாக, 'டிவி'யில், வானிலை வரைபடம் காட்டப்பட்டது.* 1928- சென்னை மியூசிக் அகாடமி அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது.* 1947 - மேற்கு வங்காள கிராமம் பாலுார்காட், முதலில் கிழக்கு பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டு விட்டது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கிழக்கு பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்பட்டு, இந்தியாவுடன் இணைந்தது. பாகிஸ்தான் கொடி இறக்கப்பட்டு, இந்திய கொடி ஏற்றப்பட்டது.* 1948 - இந்திய விடுதலை போராட்ட தலைவர், சுபாஷ் சந்திர போஸ் நினைவு நாள்.* 1951 - மேற்கு வங்காளத்தின் கரக்பூரில் முதல் ஐ.ஐ.டி., துவக்கப்பட்டது.* 1964 - தென்னாப்பிரிக்கா, ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.* 1991 - கோர்பச்சேவ் கண் முன், ரஷ்யா உடைந்து, பல நாடுகளானது.