உள்ளூர் செய்திகள்

நம்மிடமே இருக்கு மருந்து: சுக்கு!

சுக்கை இழைத்து பற்று போட தலைவலி நீங்கும் • சிறு துண்டு சுக்கை வாயில் இட்டு மென்று அடக்கி வைக்க, பல்வலி தீரும் • சுக்கை நசுக்கி ஒரு துணியில் சிறு மூட்டை கட்டி, காதில் வைக்க, காதடைப்பு, நீரடைப்பு பிரச்னை தீரும் • சுக்குப்பொடி வெந்நீரில் கலந்து குடிக்க அஜீரணம் நீங்கும். உஷ்ணம், பேதி, சீதபேதி மற்றும் வாந்தியை கட்டுப்படுத்தும் • மார்பு எரிச்சல், வயிற்று வலி, நெஞ்சு வலி, புளியேப்பம் ஆகியவற்றை போக்கும் • வயிற்றுப் பொருமல், வயிற்றுப்பசி நோயைத் தீர்க்கும். வயிற்றிரைச்சல், சளி, இருமலைப் போக்கும் • வாத நோய்களைக் கட்டுப்படுத்தும் • காசம் எனும் ஆஸ்துமா மற்றும் சைனஸ் நோய்களை கட்டுப்படுத்தும் • இதய நோய்கள் மற்றும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் • உடலில் ஏற்படும் வீக்கம், கட்டி இவைகளை குணப்படுத்தும் • நரம்புகள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாகும் • சுக்குத் தைலத்தை தலைக்கு தேய்த்து குளிக்க, ஒற்றைத் தலைவலி, தலைவலி, சைனஸ் மற்றும் காது வலி தீரும் • தினமும் சிறிதளவு சுக்கை நாம் உட்கொள்ள நோய்கள் வராமலும், வந்த நோய்கள் நீங்கவும் பேருதவியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !