நீல நிற மீன்பிடி படகுகள்!
நம் நாட்டில் பொது போக்குவரத்து வாகனங்களுக்கு வெவ்வேறு நிறம் பூசுவதுண்டு. ஆட்டோக்கள், பேருந்துகள் மற்றும் கார்கள் போன்றவை, பல நிறங்களில் காட்சியளிக்கும். மீன்பிடி படகுகளுக்கு தனி நிறம் பூச வேண்டும் என, கட்டாய விதிமுறையை அமல்படுத்தி உள்ளது, ஆப்ரிக்காவில் உள்ள மொராக்கோ நாடு. இங்குள்ள அனைத்து மீன்பிடி படகுகளும் நீல நிறத்தில் தான் இருக்க வேண்டும் என, அந்நாட்டு அரசு உத்தரவு போட்டுள்ளது. —ஜோல்னாபையன்