உள்ளூர் செய்திகள்

கோடைக்கால டிப்ஸ்!

சில சமயம் அதிக சூடு காரணமாக நரம்புகள் இழுத்துக் கொண்டு, தசைகள் சுருங்கும், வலிக்கும். தசைப்பகுதிகளை அழுத்தி, 'மசாஜ்' செய்தும், சூடான டவல்களை வைத்துக் கட்டியும் இதை சமாளிக்கலாம் *வீட்டுக்குள்ளே நல்ல காற்று வர, ஜன்னல்களையெல்லாம் திறந்து வையுங்கள். அறைக்குள் காற்று பரவ மின் விசிறியை ஓட விடுங்கள் * பழங்களில் மாம்பழம் சாப்பிடலாம். எலுமிச்சை, ஆரஞ்சு மாதிரி சிட்ரஸ் சத்து உள்ள பழங்கள் உடலில் வறட்சி ஏற்படாமல் காக்கும் * கோடைக் காலத்தில் காலை நேர நடைப்பயிற்சி தவிர, கடினமாக உடலைப் பாதிக்காத பயிற்சிகளில் ஈடுபடுங்கள் *நீச்சல் குளத்தில் போய் குளிப்பவரா? சுத்தமான தண்ணீரான்னு பார்த்துக் குளிக்கவும். தண்ணீர் மோசமாக இருந்தால், உடலில் சரும பாதிப்பை ஏற்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !