தும்பி துள்ளல்!
பெண்கள் மட்டுமே பங்குபெறும், தும்பி துள்ளலில், கேரள பாரம்பரிய வெண்ணிற புடவையில், கூத்தம்பலத்தில் உள்ள மேடையில், ஏழெட்டு பெண்கள் வட்டமாக அமர்ந்து கொள்வர். நடுவில், பிரதான கதைச்சொல்லிப் பெண், அமர்ந்து கொள்வார்.புதிதாக மலர்ந்த தும்பை மலர்களை கையில் வைத்தபடி, துள்ளித் துள்ளி, வட்டமாக நகர்ந்து, ஒவ்வொருவரையும் பார்த்து, புராண இதிகாச கதைகளைச் சொல்வார். சில சமயம் பாடவும் செய்வார். தும்பி, தன் இறக்கைகளை அடித்தபடி பறப்பது போல் இருக்குமாம் அந்தப் பெண் செய்யும் துள்ளல்.ஒவ்வொரு துள்ளலின் போதும் எதிரில் இருக்கும் பெண்கள், அவர் சொல்லச் சொல்ல கைதட்டி சப்தம் எழுப்புவர். கதை முடிந்ததும், கையில் உள்ள தும்பைக் கொத்தை தரையில் வைத்து வணங்கியபடி எழுந்து கொள்வதோடு துள்ளல் முடிவு பெறும்.