நடந்து பார்க்கும் நகரங்கள்!
மேலை நாடுகளில், பல நகரங்களை நடந்தோ, சைக்கிள் மூலமோ எளிதில் சுற்றி வந்து விடலாம்.இப்படி நடந்தே பார்த்து விடும் நகரங்களில், அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவும் ஒன்று. 'வாக் ஸ்டோர்' என்ற அமைப்பு, ஆய்வு செய்து, குறைந்தது, 2,500 நகரங்களையாவது நடந்தே பார்த்து விடலாம் என, கூறியுள்ளது.'எங்களை தொடர்பு கொண்டால், வரைபடம் தருவோம். அதை வைத்து, நகரம் முழுவதும் நடந்து, ஒரு ஊரையே பார்த்து விடலாம்...' என்கிறது இந்த அமைப்பு!