நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!
விருந்து என்றாலே, தலை வாழை இலை போட்டு சாப்பாடு பரிமாறுவது தான் வழக்கம். வாழை இலையில் சாப்பிடுவது நம் மரபு என்றாலும், அறிவியல் பூர்வமாக சில நன்மைகள் உள்ளன. வாழை இலையை நேரடியாக உண்பதென்பது இயலாத காரியம் என்பதால், இதன் மருத்துவ பண்புகள், நம் உடலுக்குள் சென்றடையும் விதமாக, அதில் உணவருந்துவதைப் பழக்கமாக கொண்டிருந்தனர், நம் முன்னோர்*வாழை இலையில் சாப்பிடுவது சுகாதாரமானது மட்டுமல்ல, எளிதில் மக்கும் தன்மை உடையது. அதில் பரிமாறப்பட்ட உணவை உண்ணும் போது, உமிழ் நீர் அதிகம் சுரந்து, செரிமானத்திற்கு உதவுகிறது*'க்ரீன் டீ'யில் இருக்கும், 'பாலிபினால்' என்ற வேதிப் பொருள், வாழை இலையில் அதிக அளவில் உள்ளது. உணவு சூடாக இலையில் இடப்படும் போது, உணவுடன் கலந்து பல நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது *இன்று, அதிகம் ஏற்படும் புற்றுநோய் உட்பட, 'பார்கின்சன்' நோய் என்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய் வராமல் நம்மை காக்கிறது*ஆண்களுக்கு ஏற்படும், 'ப்ராஸ்ட்ரேட்' புற்றுநோயைத் தடுக்கும், 'பாலிபினால்' வாழை இலையில் அதிகளவில் உள்ளதாக, ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன*அபரிதமான ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதால், பல தீவிர நோய்களைத் தடுப்பதற்கும், நம் சருமப் பாதுகாப்பிற்கும் மிகவும் சிறந்தது. இதிலிருக்கும், 'ரூட்டின்' என்ற வேதிப் பொருள், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. ரத்த உறைவு, மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதுடன், ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தப்படுத்துகிறது* உணவை சாப்பிட்டு முடித்த பின், கால்நடைகளுக்கு உணவாகவோ அல்லது மக்கி நிலத்துக்கு உரமாகவோ மாறிவிடுகிறது, வாழை இலை. மாறிவிட்ட நாகரிக உலகில், செயற்கை முறைகளை தவிர்த்து, இயற்கை தந்த வாழை இலையில் உண்டு, எல்லா பலன்களும் பெறுவோம். — எம்.விக்னேஷ்