உள்ளூர் செய்திகள்

கேரளாவுக்கு படையெடுக்கும் மேற்கு வங்கத்தினர்!

மற்ற மாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு வேலை தேடி வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பிற மாநில தொழிலாளர்கள், கேரளாவில் இருக்கின்றனர். இவர்களில், 45 சதவீதம் பேர், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்.இவர்கள், தினக்கூலியாக, 400 முதல் 900 ரூபாய் பெறுகின்றனர். இதன் மூலம், ஆண்டுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாயை, தங்கள் மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். இவர்கள் கேரளா வந்த உடன், தங்கள் அடையாள அட்டைகளை, காவல் நிலையத்தில் காட்டி, பதிவு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், எந்த காவல் நிலையத்திலும், இது செயல்படுவதே இல்லை. இவர்களில் யாராவது குற்றம் செய்யும் போது மட்டும் தான், சுறுசுறுப்பு அடைகின்றனர், போலீசார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !