இந்த ஆப்பிளில் என்ன விசேஷம்?
சீனாவில், 'ஆன்லைன் ஷாப்பிங்' நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இப்போட்டியை சமாளிக்க, ஒரு நிறுவனம், விமான பணிப் பெண்களால் முத்தமிடப்பட்ட ஆப்பிள்களை, விற்பனை செய்து வருகிறது. இது தொடர்பான விளம்பரத்தில், அழகான விமான பணிப் பெண்கள், ஆப்பிள்களை ஆசையுடன் முத்தமிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதைப் பார்த்து, ஏராளமானோர், அந்த ஆப்பிள்களை வாங்க, ஆர்டர் கொடுக்கின்றனர். ஒரு ஆப்பிளின் விலை, அதன் தரத்துக்கேற்ப, 150 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.— ஜோல்னாபையன்.