யார் வயிறு அழகு!
பிரிட்டன் மக்களால் பெரிதும் நேசிக்கப்படும், இளவரசி கேத் வில்லியம், கர்ப்பமாக இருக்கிறார். இந்த தகவலால், பிரிட்டன் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதேபோல், அமெரிக்காவில், இளம் தலைமுறையினரின் அபிமானத்தைப் பெற்ற, நடிகையும், 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளருமான, கிம் கர்தாஷியானும், கர்ப்பமாக உள்ளார். இதனால், இவர்கள், வீட்டை விட்டு வெளியில் வந்தாலே, அதை, மிகப் பெரிய செய்தியாக்கி விடுகின்றன, மீடியாக்கள்.இந்நிலையில், இளவரசி கேத்தும், கிம் கர்தாஷியானும், வெவ்வேறு நிகழ்ச்சிகளில், சமீபத்தில் பங்கேற்றனர். அப்போது, இவர்களை படமெடுத்த புகைப்படக்காரர்கள், இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்டு, 'இருவரில், யார் வயிறு, அழகாக உள்ளது?' என, விவாதம் நடத்ததாத குறையாக, செய்தி வெளியிட்டு வருகின்றன.மீடியாக்களின் இந்த நடவடிக்கையால், இளவரசி கேத்தும், நடிகை கிம் கர்தாஷியானும், பயங்கர கடுப்பில் இருக்கின்றனர்.— ஜோல்னா பையன்.