உள்ளூர் செய்திகள்

காரா... அப்படின்னா என்ன?

உலகில் பெரும்பாலான நாடுகளில், பல வித மாடல் கார்கள் பவனி வர, கியூபா நாட்டு தெருக்களில் மட்டும், 50 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழைய மாடல் கார்களையே காண முடிகிறது.பிடல் காஸ்டிரோ அதிபர் பதவிக்கு வரும் முன், தாராளமாக அமெரிக்க கார்கள் இறக்குமதி செய்யப்பட்டன. 1959ல் இருந்து அமெரிக்க கார்களை இறக்குமதி செய்ய கியூபாவில் தடை விதிக்கப்பட்டது. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி இருந்தாலும், அது எளிதாக இல்லை. இதனால், புள்ளிவிவரப்படி, 100 கியூபாக்காரர்களுக்கு, இரு கார்கள் என்ற அளவிலே உள்ளன.அதனால், கியூபா மக்கள், இப்போது, பழம்பெரும் கார்களை ஆடம்பர பொருளாக கருத ஆரம்பித்து விட்டனர். 50 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட கார்கள், இன்றும் நல்ல நிலையில் இயங்கி வருகிறது என்றால், அமெரிக்க தொழில்நுட்பம் அபாரம் என்று தானே சொல்ல வேண்டும்!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !