உள்ளூர் செய்திகள்

வில்லியம் - கதே பொம்மைகளுக்கு கிராக்கி!

மேற்கத்திய நாடுகளில், பார்பி பொம்மைகள் மிகவும் பிரபலம். அமெரிக்காவின் பிரபலமான பொம்மை தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, இந்த பொம்மைகளுக்கென, இன்றும் கிராக்கி உள்ளது. காலத்துக்கேற்ப, பல மாற்றங்கள் செய்து, இந்த பொம்மைகள் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வருகின்றன.பிரிட்டன் இளவரசர் வில்லியம் - இளவரசி கதேயின் முதலாமாண்டு திருமண விழாவையொட்டி, அவர்களைப் போல், உருவ ஒற்றுமை உள்ள பொம்மைகள் புதிதாக தயாரிக்கப் பட்டுள்ளன. திருமணத்தின் போது, வில்லியம் அணிந்திருந்த பிரிட்டன் ராணுவ சீருடை, கதே அணிந்திருந்த மெல்லிய இழைகளால் தயாரிக்கப்பட்ட வெள்ளை நிற கவுன், @பான்ற உடைகளை, இந்த பொம்மைகளுக்கு அணிவித்துள்ளனர். இந்த பொம்மைகளை வாங்குவதற்கு, இப்போதே கடும் போட்டி நிலவுகிறது. ஆனாலும், முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டுமே, இந்த பொம்மைகள் கிடைக்கும். ஒரு ஜோடி பொம்மையின் விலை, ரூபாய் 8,000 .— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !