இப்படியும் சேவை செய்யலாம்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், மார்க் பஸ்டேஸ் என்பவர் சலூன் கடை வைத்துள்ளாார். இவரிடம் முடி திருத்துவதற்காக, ஏராளமான வி.ஐ.பி.,க்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். ஆனால், மார்க், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும், பிளாட்பாரங்களில் வசிக்கும் ஏழைகள், தெருவோர சிறுவர்கள், முதியோர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று, இலவசமாக முடி திருத்தம் செய்கிறார். இது குறித்து கேட்டால், 'இதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி, கோடி ரூபாயை கொட்டி கொடுத்தாலும் கிடைப்பதில்லை...' என்று கூறுகிறார்.— ஜோல்னாபையன்.