உள்ளூர் செய்திகள்

இப்படியும் சாப்பிடலாம்!

பிரிட்டன் தலைநகர் லண்டனில், ஒரு வித்தியாசமான ஓட்டலை திறந்துள்ளனர். இங்கு, ரசாயன பொருட்கள் கலக்காத, முழுக்க முழுக்க இயற்கை முறையில் தயாரான உணவை மட்டுமே தயாரிக்கின்றனர். மேலும், எல்லா விதமான உணவுகளும், மண்பானையில் சமைக்கப்படுகின்றன.இந்த ஓட்டலில், மொபைல் போன், தொலைபேசி உட்பட, எந்தவிதமான தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் அனுமதியில்லை; மின்சாரமும் இல்லை. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான், சாப்பிட வேண்டும்.இந்த ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்கள் இஷ்டப்படி, உடை அணிந்து வரலாம்; அது, அரைகுறை ஆடையாக இருந்தாலும் பிரச்னை இல்லை. இந்த ஓட்டலில்,'பர்த்டே ரூம்' என்ற, தனி அறை உள்ளது. இதில், நிர்வாணமாக அமர்ந்தும் சாப்பிடலாம்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !