மின்சார நிறுவனத்தில் ஒப்பந்த பணி
இந்திய 'பவர்கிரிட்' நிறுவனத்தில் ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பீல்டு இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரிக்கல் 532, சிவில் 198, பீல்டு சூப்பர்வைசர் பிரிவில் எலக்ட்ரிக்கல் 535, சிவில் 193, எலக்ட்ரானிக்ஸ் 85 என மொத்தம் 1543 இடங்கள். இதில் தமிழகம் அடங்கிய தெற்கு மண்டலத்தில் 61 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ வயது: 18-29 (17.9.2025ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 400. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 17.9.2025 விவரங்களுக்கு: powergrid.in