உள்ளூர் செய்திகள்

சுண்டைக்காய் வேரில் ஒட்டு கட்டி முள் கத்திரிக்காய் சாகுபடி

சுண்டைக்காய் வேரில் ஒட்டு கட்டி, முள் கத்திரி சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது: நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல வித பழங்கள் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்யலாம். அந்த வரிசையில், முள் கத்திரிக்காய் சாகுபடி செய்துள்ளேன். இதை, மாடி தோட்டம் மற்றும் விளைநிலங்களில், எளிதாக சாகுபடி செய்யலாம். அந்த அளவிற்கு மிகவும் குட்டையாகவும், நல்ல மகசூலும் கிடைக்கும் வகையில் இருக்கும். குறிப்பாக, சுண்டைக்காய் வேரில், முள் கத்திரி செடியை ஒட்டு கட்டி சாகுபடி செய்யலாம். கத்திரி விதையில் இருந்து செடியாக சாகுபடி செய்யும் போது, ஆறு மாதங்கள் மட்டுமே, கத்திரி மகசூல் கிடைக்கும். இந்த சுண்டைக்காய் வேரில், கத்திரி செடி ஒட்டு போட்டு சாகுபடி செய்யும் போது, இரண்டு ஆண்டுகள் வரையில் கத்திரி மகசூல் பெறலாம். ஒரு முறை நடவு செய்து விட்டு, இரு ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்தால் போதும், நல்ல மகசூல், வருவாய் ஈட்ட வழி வகுக்கும். இவ்வாறு அவர் கூறினார். - -பி.கிருஷ்ணன், 98419 86400.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !