உள்ளூர் செய்திகள்

நாற்றுப்பண்ணை பாலிதீன் பைகளில் மண் - உரக்கலவை நிரப்பும் இயந்திரம்

இவ்வியந்திரமானது நாற்றுப் பண்ணைகளில் பயன்படுத்தப்படும் மண், மணல், மக்கு உரம் போன்றவற்றைத் தகுந்த விதத்தில் தூளாக்கி, கலந்து, வடிகட்டி பாலிதீன் பைகளில் 100கி, 250 கி, 500கி, 1000கி போன்ற அளவுகளில் நிரப்பவல்லது. பைகளில் அடைக்க வேண்டிய மண் - உரக்கலவையின் அளவினைக் கூட்டவும் குறைக்கவும் பயன்படும் வகையில் காலால் இயக்கப்படும் பெடல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மின்மோட்டார் (3 குதிரைத்திறன்), உட்செலுத்தும் கலன் (பீட் ஹாப்பர்), தூளாக்கும் கம்பி (பேடில்), வடிகட்டி (சீவ்) ஆகிய பாகங்களைக் கொண்ட இவ்வியந்திரம் ஓரளவு காய்ந்த மண், மணல், மக்கு உரம் ஆகியவற்றை எளிதில் கையாள்கின்றது.இரு பெண் தொழிலாளர்கள் எளிதில் இயக்கிடும் நோக்கில் தோட்டங்களுக்கு எளிதில் தூக்கிச் செல்லும் வகையில் அழகான தோற்றத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒருவர் நின்றுகொண்டும் மற்றொருவர் அமர்ந்து கொண்டும் பாதுகாப்பான முறையில் பணியாற்றலாம். முன் அனுபவமோ பயிற்சியோ இன்றி பாமரத் தொழிலாளர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் தொழில்நுட்பத்தில் இயங்குவதால் இயந்திரத்தை இயக்குவது மிக எளிது.ஒரு மணிக்கு 100 கிலோ கிராம் மண் - உரக்கலவையை பைகளில் நிரப்பலாம். அதாவது 500 கிராம் பைகள் எனில் மணிக்கு 200 பைகளில் நிரப்ப இயலும். இக்கருவியினால் 70% செலவும், 80% நேரமும் மிச்சமாகின்றன. இதன் உத்தேச விலை ரூ.ஒரு லட்சம். இக்கருவியினால் வணிக நாற்று பண்ணைகளில் மாதம் ஒன்றுக்கு 30,000 நாற்றுக்களை எளிதில் உற்பத்தி செய்யலாம். தொடர்புக்கு: எஸ்.வேலுச்சாமி, கோவை. 0422-267 3380. 98430 33808.-கே.சத்தியபிரபா, உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !