உள்ளூர் செய்திகள்

நவீன தொழில்நுட்பம்

மானாவாரி நெல் சாகுபடியில் சவால்களும் தீர்ப்புகளும் - தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் புழுதியில் நேரடி நெல் விதைப்பு பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.இம்மாவட்ட உழவர்கள் முதல் மழையைப் பயன்படுத்தும் நோக்கில் புழுதி உழவு செய்யப்பட்டுள்ள வயல்களில் ''முன் பருவ விதைப்பு'' செய்கின்றனர். பின்னர் பெறப்படும் கனமழையினால் கண்மாய்கள் நிரப்பப்படுமாயின் இதை நெல் சாகுபடி பாசன சாகுபடியாக மாற்றிக் கொள்ளப்படுகிறது.நான்கு(சந்தேகம்) பெரிய கண்மாய்களின் உதவியால் சுமர் 25,000 ஏக்கர் வரை நெல் நடவு முறையில் சாகுபடி செய்யப்படுகிறது.புழுதிவிதைப்பு சாகுபடி செய்யும்போது எதிர்பார்க்கப்படும் முதல் மழை தாமதமானால் விதையின் முளைப்புத்திறன் மிகவும் குறைந்துவிடும். முதல் மழையினால் முளைத்துவந்தபிறகு அடுத்த மழை தாமதப்படும்போது முளைத்தவை அனைத்தும் கருகும் வாய்ப்பு அமைந்துவிடுகிறது.மாற்று வழிகள்: கைவிதைப்பு செய்வதால் சரிசமமான முளைப்புத்திறனும் வளர்ச்சியும் இல்லாமல் போய்விடுகிறது. எனவே டிராக்டரினால் இயக்கப்படும் விதைப்புக்கருவியைப் பயன்படுத்த வேண்டும். போதுமான பயிர் இடைவெளி பின்பற்றப்படுவதால் பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. பூச்சி நோய் தவிர்க்கப்பட்டு அதிக கிளைகள், மணிகளுடன் உயர் விளைச்சல் எட்டப்படுகிறது.நடவு செய்யப்படும்போது 30லிருந்து 35 நாட்கள் வயதுள்ள நாற்றுக்களை நடுகின்றனர். குறுகியகாலப் பயிர்களுக்கு பதிலாக மத்திய, நீண்ட வயதுடைய ரகங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் பயிர் சாகுபடிக்காலம் அதிகரிப்பதால் பின்பருவ வறட்சியை சந்திக்க நேரிடுகிறது. மேலும் நடவில் நெருக்கமாகவும் ஒரு குத்துக்கு சுமார் 4 முதல் 5 நாற்றுக்களைவைப்பதாலும் விளைச்சல் இழப்பு ஏற்படுகிறது.இதற்கு தீர்வாக இயந்திர நடவு செய்யலாம். அவ்வாறு செய்யப்படும்போது 15 நாள் நாற்றுக்கள், குத்திற்கு 1 அல்லது 2 வீதம் நடப்படுகிறது. எனவே போதுமான சரியான பயிர் இடைவெளி, இயந்திரக் களை எடுப்பு, குறைவான ஆட்செலவு போன்ற காரணங்களால் இடுபொருள் செலவு குறைக்கப்பட்டு அதிக கிளைகள் வெடித்து, தானியங்கள் நன்கு திரண்டு கூடுதல் மகசூல் பெறலாம்.ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள்:சராசரியாக தானியம் விற்பனை விலை ரூ.10/கிலோ. (தகவல்: முனைவர் ப.துக்கையண்ணன், சி.விஜயராகவன், வ.கணேசராஜா, வேளாண் அறிவியல் நிலையம், ராமநாதபுரம்-623 503. 04536-230 359)1. நெல் பயிரிடப்படும் முறை ஒப்பீடு (ஒரு ஏக்கருக்கு)சாகுபடி முறை - ஆட்கள் - விதைஅளவு (கி.கி) - சாகுபடி காலம் (நாட்கள்) - சிம்புகளின் எண்ணிக்கை - விளைச்சல்நேரடி விதைப்பு - 1 - 30 - 110-130 - 9-14 - 1300நேரடி இயந்திர விதைப்பு - 1 - 20 - 110-130 - 12-18 - 1600கை நடவு - 20 - 40 - 150 - 15-20 - 1900இயந்திர நடவு - 3 - 5 - 135 - 35-40 - 2700நேரடி விதைப்பில் குறுகிய வயது ரகங்கள் பயிரிடப்படுகின்றன. நடவு சாகுபடியில் மத்திய அதிக வயது ரகங்கள் பயிரிடப்படுகின்றன.2. வரவு செலவு கணக்கீடு (ஒரு ஏக்கருக்கு)சாகுபடி முறை - சாகுபடி செலவு (ரூ) - மொத்த வருமானம் (ரூ) - கூடுதல் விளைச்சல் (கிகி) - கூடுதல் வருமானம்(ரூ)நேரடி கை விதைப்பு - 11,250 - 13,000 - 0 - 0நேரடி இயந்திர விதைப்பு - 11,000 - 16,000 - 300 - 3000கை நடவு - 17,650 - 19,000 - 600 - 6000இயந்திர நடவு - 9625 - 27,000 - 1400 - 14,000-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !