உள்ளூர் செய்திகள்

நீடித்த மானாவாரி இயக்கத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு

மானாவாரி நிலங்களில் நிலையான வேளாண் வளர்ச்சிக்கான திட்டத்தின் கீழ் விவசாயிகள் அடங்கிய மானாவாரி நிலத்தொகுப்பு மேம்பாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்கள் மூலம் விவசாயிகளை கலந்தாலோசித்து தேவைக்கேற்ப மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கிறது.நீர் சேகரிப்பு கட்டமைப்பு:தேர்வு செய்யப்பட்ட மானாவாரி நிலத்தொகுப்புகளில் தடுப்பணைகள், சமுதாயக் குளங்கள், கசிவு நீர் குட்டைகள் மற்றும் பண்ணைக்குட்டைகள் ஆகிய நீர் சேமிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படும். தடுப்பணைகள் ஓடைகளின் குறுக்கே தடுப்பு ஏற்படுத்தி மழைநீர் சேகரிக்கவும், நிலத்தடி நீர் செறிவூட்டவும் தடுப்பணைகள் அமைக்கப்படுகிறது. மழை பெய்யும் பொழுது ஓடையில் மழை நீரானது பெருக்கெடுத்து ஓடி வீணாவது தடுக்கப்பட்டு மழை நீர் சேமிக்கப்படுகிறது. தடுப்பணைகளில் சேமிக்கப்படும் மழை நீர் சுற்றியுள்ள மானாவாரி நிலங்களின் பாசனத்திற்கு பயன்படுகிறது. மேலும் தடுப்பணைகளில் தேங்கும் மழைநீர் நிலத்தில் ஊடுருவி சுற்றியுள்ள மானாவாரி நிலப்பரப்பில் உள்ள மண்ணின் ஈரப்பதத்தினை அதிகரிக்கிறது. எனவே பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஈரப்பதம் காக்கப்படுகிறது. மண்ணில் மழைநீர் ஊடுருவி நிலத்தடி நீர் செறிவூட்டப்படுகிறது. டி.யுவராஜ், வேளாண் பொறியாளர், உடுமலை.தொடர்புக்கு 94865 85997.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !