உள்ளூர் செய்திகள்

பாரம்பரிய காய்கறி பயிர்கள்

பசுமைப்புரட்சியின் விளைவால் மண் வளம் மலட்டுத் தன்மையானது. இந்த வரிசையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளை உட்கொள்வதால், இயற்கையாக கிடைக்கும் சத்துக்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் போதுமானதாக இல்லை. நம் பாரம்பரிய காய்கறிகளில் கிடைக்கும் சத்துக்கள் வேறு எதிலும் இல்லை என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. குழித்தக்காளிஇந்த ரகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் சாகுபடியாகும். விதையளவு ஏக்கருக்கு 100 கிராம் மற்றும் சென்டுக்கு 10 செடி. அதிக டார்டாரிக் அமில தன்மையுள்ள, பூச்சி மற்றும் நோய்க்கு எதிரான ரகம். வறண்ட நிலத்திற்கு ஏற்ப விளையும். வேரில் இருந்து மீண்டும் முளைக்கும் தன்மை கொண்டது.கத்தரி வெப்பமண்டல தாவரம். இவை கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுவென்னி கிராமத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. ஜூன் முதல் அக்., வரை சாகுபடி பருவம். இதில் சிறுஇலை நோய், மைக்கோபிளாஸ்மா போன்ற முக்கிய நோய் பிரச்னை இருக்கும். நோய் எதிர்ப்புக்கு ஏற்ற ரகம். நடவிற்கு பின் 55 முதல் 60 நாட்களில் முதல் அறுவடை செய்யப்படும். இதன் காய் உருளை வடிவம் கொண்டது. அறுவடை 5 நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். மகசூல் எக்டேருக்கு 20 முதல் 25 டன்கள் வரை கிடைக்கும்.கண்ணாடி கத்தரிஇந்த ரகம் சேலம் தேவூரில் சாகுபடி செய்யப்படும். ஏக்கருக்கான நாற்றங்கால் 1.5 சென்டில் தயாராகும். ஏக்கருக்கு 300 கிராம் விதை தேவைப்படும். பூச்சி மற்றும் நோய் தாக்குதலின்றி கனியில் இருந்து சேகரிக்கப்பட்ட விதையாக இருத்தல் அவசியம். இவ்விதைகளை 2 முதல் 3 ஆண்டு வரை சேமிக்கலாம். கண்ணாடி கத்தரி சாகுபடி காலம் ஆக., மற்றும் ஜன.,ல் துவக்கலாம். இதன் பயிர் காலம் 6 முதல் 7 மாதங்கள். மற்ற ரகங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ரகம் ஈரோடு சந்தையில் நல்ல மதிப்பு பெற்றிருக்கும். மாடு, ஆடு சாணம் மற்றும் கோழி பண்ணை கழிவுகளை எருவாக போடலாம்.சில நேரம் செடியின் இலைகளும் எருவாகும். இந்த ரகம் பூச்சி மற்றும் நோய் தாக்குதலின்றி இருப்பதால், விவசாயிகள் இந்த ரகத்தை சாகுபடி செய்ய ஆர்வம் கொள்கின்றனர். செடியின் உயரம் 4 முதல் 5 அடி. அதிக மலை இப்பயிருக்கு ஏற்றதல்ல. மூன்று மாதங்களுக்கு விவசாயிகளுக்கான நிகர வருமானம் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய். அறுவடை காலத்தின் போது ஊடுபயிராக 'குட்டை புடலை' விதைகளை கத்தரிக்காய் வயலில் விதைக்கலாம். புடலை செடி இக்கத்தரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். குட்டை புடலை ஊடுபயிராக போடும் போது விவசாயிக்கு கூடுதலாக 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.குண்டு மிளகாய்ராமநாதபுரம் பகுதியின் தட்பவெப்பத்திற்கு இவை நன்கு வளரும். பாரம்பரிய ரகமான குண்டு மிளகாய் மற்ற சம்பா ரகங்களை விட கூடுதல் விளைச்சல் தருவதால் அதிக சாகுபடி செய்யப்படுகிறது. மழை அளவு அதிகரிக்கும் போது மிளகாய் விளைச்சல் கடுமையாக பாதிக்கும்.மழையளவு குறைவாக இருக்கும் போது மட்டுமே சாகுபடி செய்ய வேண்டும். அதிக வருமானம் தரக்கூடியது. சாகுபடி செலவு ஏக்கருக்கு 18 ஆயிரம் ரூபாய் தான். வருமானமோ 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆவணி, கார்த்திகையில் விதைத்து சித்திரை, வைகாசியில் அறுவடை செய்யலாம். மிளகாயுடன் ஊடுபயிராக பருத்தியை விதைக்கலாம். சில விவசாயிகள் மிளகாயுடன் கொத்த மல்லியை ஊடுபயிராக விதைக்கின்றனர். ஏக்கருக்கு ஆயிரம் கிலோ மிளகாய் மகசூல் கிடைக்கிறது.சிவப்பு வெண்டைகன்னியாகுமரி விளவங்கோடு பனவிளை கிராமத்தில் சிவப்பு வெண்டை சாகுபடி செய்யப்படும். இது வெப்பமண்டல நேரடி விதைப்பு பயிர். 100 முதல் 120 நாட்கள் பயிர். பயிர் செய்ய ஜூன் முதல் ஆக., வரை உகந்தகாலம். அறுவடைக்கு அக்., உகந்தது. வடகிழக்கு பருவமழையிலிருந்து இப்பயிரை காப்பாற்ற முடியும். நன்றாக வறண்ட வண்டல் மண் மிக உகந்தது மற்றும் சற்று பெரிய பகுதியாகவும் இருக்க வேண்டும். இந்த ரகம் பல்வேறு வகையான சமையலுக்கு ஏற்றதாக உள்ளது. இச்செடி 4 அடி உயரம் வளரும். இதில் கரோட்டின் கத்து அதிகம் இருக்கும். செடியில் இருந்து 20 நாட்களுக்கு பின் மகசூல் துவங்கும். ஐந்தாவது இலை தோன்றிய பிறகு பூ பூக்கும். முதன்மை தண்டில் இருந்து பல்வேறு கிளைகள் பிரியும்.ஒவ்வொரு கிளையிலும் காய் பிடிக்கும். இந்த ரகம் 'வெள்ளை ஈ பெமீசியா திரிப்ஸ் டபேசி' என்ற பூச்சியினம் ஏற்படுத்தும் மஞ்சள் மொசைக் நோய் எதிர்ப்புதிறன் கொண்டது. காய்கள் முதிர்ச்சியடைந்தவுடன் அறுவடை செய்யலாம். எக்டேருக்கு 12 முதல் 15 டன்கள் வரை விளைச்சல் கிடைக்கும்.நீள மிளகாய்பனவிளை கிராமத்தில் சாகுபடி செய்யப்படும். இது காந்தாரி மிளகாய்போன்றே இருக்கும். ஆனால் அளவு, நிறத்தில் மாறுபடும். இதன் பூ, இலை நீலத்தில் இருக்கும். இது அலங்கார செடிபோல் தோற்றம் கொண்டு பார்வையாளர்களை ஈர்க்கும். இதன் காய்கள் உருண்டையாக முதிர்ச்சி நிலையில் சிவப்பு நிறத்திற்கு மாறும். இவை கொத்துகொத்தாக காய்க்கும். இவை சமையலுக்கும், மரவள்ளி கிழங்குடன் சாப்பிடவும் பயன்படுகிறது.நாட்டு அவரைஇவை காஞ்சிபுரம் மாவட்டம் வல்லத்தோடு கிராமத்தில் சாகுபடியாகும். இந்த ரகத்தை பயிரிட ஏதுவான பருவம் ஆடிப்பட்டம். விதைத்த 45 நாட்களுக்கு பிறகு வளர தொடங்கும். அறுவடை வார இடைவெளியில் செய்ய வேண்டும். இதன் மகசூல் வீதம் சென்ட்டிற்கு வாரத்திற்கு 3 முதல் 4 கிலோ கிடைக்கும். முதிர்செடியின் சாம்பல், மாட்டு சாணம் இவற்றை இளம்செடியின் மீது தெளிக்கும் போது பூச்சி மற்றும் நோயிலிருந்து கட்டுப்படுத்தலாம்.தெர் கொத்தவரைஇவை நாகபட்டினத்தில் சாகுபடி ஆகும். இந்த ரகம் சாகுபடி செய்ய ஏற்ற பருவம் ஜூன், ஜூலை. வயல் வரப்புகளில் 3 விதைகள் ஒரு குத்துக்கு என்ற அளவில் விதைக்க வேண்டும். விதைத்த 30 நாட்களுக்கு பின் அறுவடை செய்யலாம். இதை கையால் பறித்து அறுவடை செய்யலாம். நாட்களுக்கு ஒரு முறை என்ற இடைவெளியில் அறுவடை செய்யலாம். சராசரியாக வாரத்திற்கு 50 கிலோ வீதம் அறுவடை செய்யலாம். இந்த அவரைக்கு வாய், வயிற்றுப்புண்களை குணப்படுத்தும் திறன் உண்டு. ஏக்கருக்கு 1,800 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.மொச்சை பயறுஇவை நாமக்கல் வடவத்துார் கிராமத்தில் டிச.,ல் விதைக்கப்படும். ஏக்கருக்கு 300 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஏக்கருக்கு ஒரு கிலோ விதை நடவுக்கு பயன்படுத்தலாம். மண் தன்மை மணல் போன்று, நீர் ஆழமான அடுக்குகளிலும் சென்றடையுமாறு இருக்க வேண்டும். எனவே இப்பயிரை மானாவாரி விதைப்பில் மட்டும் பயிர் செய்ய வேண்டும். இது கொடி போன்ற தன்மை கொண்டிருப்பதால் இதை ஊடுபயிராக பயிர் செய்ய முடியாது. அறுவடை செய்த விதைகளை ஒரு ஆண்டு வரை எந்த ரசாயனமும் இன்றி வைத்திருக்கலாம். இவை கால்நடை தீவனமாகவும் பயன்படுகிறது.-எல்.விமலேந்திரன், உதவி பேராசிரியர்வேளாண்மை அறிவியல் நிலையம் குன்றக்குடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !