மாற்றுப்பயிர் விவசாயம் - விவசாயி அனுபவம்
நாகர்கோவில் இரயில்வே ஜங்ஷனுக்கு கிழக்கே சுமார் அரை கி.மீ. தூரத்தில், சுமார் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்ட களிமண் நிலத்தில் முழுவதும் நெற்பயிரும், ஒருசில தென்னந்தோப்புகள் மட்டுமே உள்ளன. வித்தியாசமாக ஏதேனும் செய்யலாமே என்ற எண்ணத்தில் இருந்த எனக்கு, சுமார் 5-6 வருடங்களுக்கு முன்பு தினமலரில் வெளிவந்த ஒரு கட்டுரையும், அதைத்தொடர்ந்து நான் சேகரித்த சில தகவல்களையும் கொண்டு, எங்களுக்கு சொந்தமான முக்கால் ஏக்கர் நிலத்தில் மரப்பயிரான (Timberwood) மகாகெணி சுமார் 350, அல்கேசியா சுமார் 60 மரங்களை கடந்த 4 வருடங்களுக்கு முன்னால் நட்டு வளர்த்து வருகிறேன். பலருடைய கவனத்தையும் ஈர்த்திருப்பதாக அறிகிறேன்.வி.நயினார், நாகர்கோவில் - 629 002. போன்: 94872 73611