உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  குடிகார அண்ணன் கொலை தம்பி உட்பட 3 பேர் கைது

 குடிகார அண்ணன் கொலை தம்பி உட்பட 3 பேர் கைது

ஆனேக்கல்: குடிகார அண்ணனை கொலை செய்த தம்பியும், உதவிய இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு ரூரல் ஆனேக்கல் காகலிபூர் பகுதியில் கடந்த 6ம் தேதி ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதை கைப்பற்றி பன்னரகட்டா போலீசார் விசாரித்தனர். கலபுரகியை சேர்ந்த தன்ராஜ், 24, என்பவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. தன்ராஜின் தம்பி சிவராஜ் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் விசாரித்ததில், தன் நண்பர்களுடன் சேர்ந்து அண்ணனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவரையும், அவரது நண்பர்கள் சந்தீப், பிரசாந்த் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் சிவராஜ் கூறுகையில், ''என் அண்ணன் தன்ராஜ் தினமும் குடித்துவிட்டு பெற்றோருடன் சண்டை போடுவார். ஆடு, கோழி ஆகியவற்றை திருடுவார். தினமும் வீட்டின் முன் ஏதாவது தகராறு நடக்கும். இதனால், எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. '' பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான், என் அண்ணணுக்கு பெங்களூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி காரில் அழைத்து வந்தேன். காரில் இருந்த என் நண்பர்கள் உதவியுடன் அண்ணனை கத்தியால் குத்திக் கொலை செய்தேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை