உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  3 யானைகளுக்கு ராஜ உபசரிப்பு

 3 யானைகளுக்கு ராஜ உபசரிப்பு

மைசூரு: மைசூரு ஜம்பு சவாரியின் போது, தங்க அம்பாரியை சுமக்க பயிற்சி பெற்று வரும் மூன்று யானைகளுக்கு ராஜ உபசரிப்பு நடக்கிறது. இந்தாண்டு அபிமன்யு யானை, 60 வயதை கடந்ததால், ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, இந்தாண்டு மைசூரு தசராவின் ஜம்பு சவாரியின் போது, 750 கிலோ தங்க அம்பாரியை, எந்த யானை சுமக்கும் என்று ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனை முடிவில், மகேந்திரா, தனஞ்செயா, பிரசாந்த் ஆகிய மூன்று யானைகளை தேர்வு செய்தனர். இந்த யானைகளுக்கு தலா ஐந்து நாட்கள் வீதம், 500 கிலோ எடை கொண்ட ஆறு மூட்டைகள் சுமந்து பயிற்சி பெற்று வருகின்றன. மூன்றில் எந்த யானை தங்க அம்பாரியை சுமக்கும் என்பது தெரியாததால், இம்மூன்று யானைகளுக்கும் அரண்மனை வளாகத்தில் ராஜ உபசரிப்பு நடக்கிறது. தினமும் குளிப்பாட்டி, கூடுதலாக சிறப்பு உணவும், கீரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இம்மூன்று யானைகளின் தோல்களும் பளபளப்பாக தெரிய, தினமும் எண்ணெய் தடவி குளிப்பாட்டப்படுகிறது. குளிப்பாட்டும் போது, பாகன்கள் மூன்று யானைகளுக்கும் சைகைகள் காட்டி, அவை எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதை கவனிக்கின்றனர். இம்மூன்று யானைகளும் தங்களின் தினசரி நடைபயிற்சி முடித்த பின், சிறப்பு உணவு வழங்கப்பட்டு, குளிப்பாட்டப்படுகின்றன. அனைத்து பயிற்சிகளும் முடிந்ததும், ஜம்பு சவாரியில், தங்க அம்பாரியை சுமக்கும் யானை தேர்வு செய்யப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி