| ADDED : செப் 08, 2026 03:52 AM
பெங்களூரு: கர்நாடகாவில் நான்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகள், நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: l பெங்களூரு தென்மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அனிதா பீமப்பா ஹட்டன்னவர், பெங்களூரு சி.ஐ.டி., - எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். l காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராம் அரசித்தி, பெங்களூரு நகர உளவு பிரிவு துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். l காத்திருப்போர் பட்டியலில் இருந்த லட்சுமி கணேஷ், பெங்களூரு தென்மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப் பட்டுள்ளார். l பெங்களூரு சி.ஐ.டி., - எஸ்.பி., சாம் வர்க்கீஸ், மங்களூரு நகர சட்டம் - ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.