உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெங்களூரில் சட்ட விரோதமாக தங்கியுள்ள 446 வெளிநாட்டினர்

 பெங்களூரில் சட்ட விரோதமாக தங்கியுள்ள 446 வெளிநாட்டினர்

பெங்களூரு: ''பெங்களூரில் விசா காலம் முடிந்தும், சட்ட விரோதமாக, 446 வெளிநாட்டினர் தங்கியுள்ளனர்,'' என, மேல்சபையில் உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார். மேல்சபையில் நேற்று பா.ஜ., உறுப்பினர் கோபிநாத் கேள்விக்கு பதிலளித்து, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது: தற்போது பெங்களூரில் முறையான விசா, பாஸ்போர்டுடன், 5,304 வெளிநாட்டினர் தங்கி உள்ளனர். கர்நாடகாவில் குடியேறிய அனைத்து வெளிநாட்டினர் குறித்து முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், இதே காலகட்டத்தில், மாநிலத்தில் 911 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களில், வங்கதேசத்தின் 868, பாகிஸ்தானின் 20, நைஜீரியாவின் 13, இலங்கையின் 8, மியான்மர், உகாண்டாவை சேர்ந்த தலா ஒருவர் என கண்டறியப்பட்டு உள்ளனர். அதே வேளையில், பெங்களூரில் மட்டும், 446 வெளிநாட்டினர் தங்கள் விசா காலம் முடிந்த பிறகும் வசிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ