உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  புதிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 7 பேர் உதவி கலெக்டர்களாக நியமனம்

 புதிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 7 பேர் உதவி கலெக்டர்களாக நியமனம்

பெங்களூரு: பயிற்சி காலம் முடிந்த, புதிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஏழு பேரை உதவி கமிஷனர்களாக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்று, 2024ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., கேடர் அதிகாரிகளாக தேர்வாகி, பயிற்சி காலம் முடித்த ஏழு பேரை, உதவி கமிஷனர்களாக நியமித்து, அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி புருராஜ் சிங் சோலங்கி - சிக்கமகளூரு துணை மண்டல உதவி கமிஷனராகவும்; ரித்திகா வெர்மா - கலபுர கி துணை மண்டலம்; சுபிஷான் ஹக் - விஜயபுரா துணை மண்டலம்; அபினவ் ஜெயின் - பீதர் துணை மண்டலம்; கோடே சமீர் பிரகாஷ் - சவனுார் துணை மண்டலம்; ரம்யா - கார்வார் துணை மண்டலம்; நாகேந்திர பாபு குமார் - லிங்கசுகுர் துணை மண்டலத்திற்கு உதவி கமிஷனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுபோல மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நான்கு பேரை அரசு இடமாற்றம் செய்துள்ளது.  ச மூக நல துறை கமிஷனர் ராகேஷ் குமார், பெங்களூரு தெற்கு மாநகராட்சி கமிஷனராக நியமனம்.  பெங்களூரு தெற்கு மாநகராட்சி கமிஷனர் ரமேஷ், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் சுகாதாரம் மற்றும் கல்வி துறை சிறப்பு கமிஷனராக நியமனம்.  காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஷில்பா நாயக், கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் தேர்தல், பேரிடர் மேலாண்மை சிறப்பு கமிஷனராக நியமனம்.  கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் சுகாதாரம் மற்றும் கல்வி துறை சிறப்பு கமிஷனர் வெங்கடாசலபதி, பெங்களூரு சென்ட்ரல் மாநகராட்சியின் வளர்ச்சி துறை கூடுதல் கமிஷனராக நியமனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை