உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மொபைல் டார்ச் வெளிச்சத்தில் பஸ்சை ஓட்டிய ஓட்டுநர்

 மொபைல் டார்ச் வெளிச்சத்தில் பஸ்சை ஓட்டிய ஓட்டுநர்

ஹூப்பள்ளி: ஹூப்பள்ளியில் இருந்து, வடமேற்கு போக்குவரத்துக்கழக பஸ், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு அத்திகேரிக்கு புறப்பட்டது. குந்த்கோள் தாலுகாவின், சம்ஷி அருகில் செல்லும் போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, ஹெட் லைட்டுகள் எரியவில்லை. நடு வழி என்பதால், பயணியரை இறக்கி விடவும் முடியாது. அப்போது உதவிக்கு வந்த பயணியர், தங்கள் மொபைல் போன் டார்ச்சுகளை ஆன் செய்து, பஸ்சின் முன்புற கண்ணாடி வழியாக வெளிச்சம் காட்டினர். அந்த வெளிச்சத்தில், ஓட்டுநர் சம்ஷியில் இருந்து குடகேரி வழியாக, 15 கி.மீ., தொலைவு அத்திகேரி வரை பஸ்சை ஓட்டி, பயணியரை பாதுகாப்பாக அழைத்து வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்