உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அமைச்சர் மகன் ஆலைக்கு வந்த லாரியில் பயணித்தவர் மின்சாரம் தாக்கி மரணம்

 அமைச்சர் மகன் ஆலைக்கு வந்த லாரியில் பயணித்தவர் மின்சாரம் தாக்கி மரணம்

தார்வாட்: அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் மகனின் சர்க்கரை ஆலைக்கு, கான்கிரீட் இயந்திரம் கொண்டு செல்லும் போது, லாரியில் அதிக மின் அழுத்தம் உடைய மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மகளிர் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர். இவரின் மகன் மிர்ணாள், தார்வாடின் புடலகலகட்டி கிராமத்தில், 'மிர்ணாள் சுகர்ஸ்' என்ற ஆலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் கட்டுமான பணிக்காக, பெலகாவி மாவட்டம் நந்தகர்கில் இருந்து கான்கிரீட் இயந்திரம் ஏற்றிய லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியில் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். தார்வாடின் பெடகேரி கிராமம் அருகே செல்லும் போது, உயர்மின் அழுத்த கம்பத்தில் லாரி மோதியது. மோதிய வேகத்தில் மின்சார ஒயர் லாரியின் மீது பட்டது. இதை பார்த்த லாரியில் பயணித்த பெலகாவியின் ரமேஷ் கவடே, 30, ஒயரை நீக்க முயற்சித்த போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரியில் அமர்ந்திருந்த மற்ற இருவர் உயிர் தப்பினர். தகவல் அறிந்த கரகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி