உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஜெர்மனியில் இருந்து வந்தவர் பிளக்ஸ் விழுந்ததில் உயிரிழப்பு

 ஜெர்மனியில் இருந்து வந்தவர் பிளக்ஸ் விழுந்ததில் உயிரிழப்பு

நெலமங்களா: நண்பர் திருமணத்திற்காக ஜெர்மனியில் இருந்து வந்த நபர் மீது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். பெங்களூரு ரூரல் நெலமங்களாவை சேர்ந்தவர் தேஜஸ் கவுடா, 27. இவர், ஜெர்மனியில் எம்.எஸ்.சி., படித்து வந்தார். தன் நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கடந்த வாரம் பெங்களூரு வந்தார். கடந்த திங்கட்கிழமை நெலமங்களா நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே பைக்கில் சென்றார். அப்போது, சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் அவர் மீது சாய்ந்தது. இதனால், நிலை தடுமாறியவர் பைக்குடன் கீழே விழுந்தார். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நெலமங்களா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்காக பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாலையில் வைக்கப்படும் பிளக்ஸ்களை உடனடியாக அகற்ற வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். நெலமங்களா போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை