உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தகவல் உரிமை சட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுரை

தகவல் உரிமை சட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுரை

பெங்களூரு: ''ஜனநாயக நடைமுறைப்படி, ஆட்சி நிர்வகிப்பில் வெளிப்படை தன்மையை கொண்டு வர, பொது ஆவணங்களை மக்களின் முன் வைப்பது, தகவல் உரிமை சட்டத்தின் நோக்கமாகும்,'' என மாநில தகவல் ஆணைய கமிஷனர் ஹரிஷ் குமார் தெரிவித்தார். பெங்களூரு ரூரல் மாவட்டம், மாவட்ட பஞ்சாயத்து, போலீஸ் துறை சார்பில் அதிகாரிகளுக்கு தகவல் உரிமை சட்டம் குறித்து பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநில தகவல் உரிமை கமிஷனர் ஹரிஷ்குமார் பேசியதாவது: தகவல் உரிமை சட்டம் மிகவும் வலுவானது. அரசின் ஆணிவேரை அசைத்து பார்க்கும் சக்தி கொண்டது. மக்களுக்கான இந்த சட்டத்தை பற்றி, அரசு அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டும். அதே போன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்வோர், சட்டத்தை துஷ்பிரயோகம் செய் ய கூடாது. சமுதாய நலன் மற்றும் சுதந்திரத்தை காப்பாற்றும் நோக்கில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொது மக்கள் தகவல் கேட்க வேண்டும். கிராம வ ளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், நகர வளர்ச்சி, வருவாய், பொதுப்பணி, நிதித்துறை, நரேகா உட்பட பல துறைகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அதிகமான மனுக்கள் வருகின்றன. பொது தொடர்பு அதிகாரிகளுக்கு, முழுமையான தகவல் தெரிந்திருந்தால், மனுக்களை விரைந்து கவனிக்கலாம். போலீஸ் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் மீறப்படுகின்றன என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே அனைத்து போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதில் பதிவாகும் காட்சிகளை ஓராண்டு வரை, பாதுகாக்க வேண்டும். தகவல் அதிகாரி சரியான காரணங்கள் இல்லாமல், தகவல் தெரிவிக்காவிட்டால் அல்லது உள் நோக்கத்துடன் தவறான தகவல்களை தெரிவித்தால், அபராதம் விதிக்க வேண்டி வரும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். தகவல் கேட்டு வரும் மனுக்களை, உடனுக்குடன் கவனிக்க வேண்டும். ஜனநாயக நடைமுறைப்படி, ஆட்சி நிர்வகிப்பில் வெளிப்படையை கொண்டு வருவது, பொறுப்புணர்வை ஊக்கப்படுத்துவது, பொது ஆவணங்களை மக்களின் முன் வைப்பது, தகவல் உரிமை சட்டத்தின் நோக்கமாகும். இந்த சட்டம் தவறாக பயன்படுவதை தடுக்க, அதிகாரிகளால் மட்டுமே முடியும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை